March 24, 2023 2:09 am

பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்குத் தண்டனை ரத்து | உச்ச நீதிமன்றம் தீர்ப்புபேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்குத் தண்டனை ரத்து | உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ராஜீவ் கொலை வழக்கில் கருணை மனு மீது முடிவெடுக்க தாமதம் ஏற்பட்டதைக் காரணம் காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

 மனுதாரர்களின் கோரிக்கையை கடுமையாக எதிர்த்த மத்திய அரசு, “இந்த விவகாரத்தில் முடிவெடுக்க மத்திய அரசு அளவுக்கு அதிகமான தாமதம் எதையும் செய்யவில்லை. இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் இதுவரை தங்கள் செயலுக்காக சிறிதும் வருந்தவில்லை என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருந்தது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, கடந்த 4ம் தேதி  தீர்ப்பை ஒத்திவைத்தது.

 இதையடுத்து இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்து . தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது

மேலும் இவர்களை விடுதலை செய்வதா வேண்டாமா என்ற முடிவை தமிழக அரசு எடுக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளது.

aa2

aa3

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்