ராகுல் காந்தியிடம் மன்னிப்பும், ஜெயலலிதாவிற்கு நன்றியும் கூறிய நளினி மகள்ராகுல் காந்தியிடம் மன்னிப்பும், ஜெயலலிதாவிற்கு நன்றியும் கூறிய நளினி மகள்

arithra

சிறையில் இருந்து முருகன் நளினி விடுதலையாவதயடுத்து லண்டனில் வசித்து வரும் அவர்களது மகள் ஹரித்திரா விரைவில் சென்னை வருகிறார். இந்நிலையில் தனது பெற்றோர் விடுதலைக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் கூறியது:

எனது பெற்றோர் அப்பாவிகள். அவர்கள் என்றாவது ஒருநாள் விடுதலை ஆவார்கள் என்று நம்பிக் கொண்டிருந்தேன். அது நடந்து விட்டது.

தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்துக்காக அவர்கள் இருவரும் போதுமான அளவுக்கு வருத்தப்பட்டு விட்டார்கள். அவர்கள் மன்னிக்கப்பட வேண்டும்.

நாம் நேசிக்கும் ஒருவரை இழந்து வாடும் துன்பத்தை நானும் அனுபவித்துள்ளேன். அந்த வகையில் உண்மையில் ராகுலிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

என் பெற்றோரை விடுதலை செய்து முதல்– அமைச்சர் ஜெயலலிதா அறிவித்ததை அறிந்ததும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. முதல்–அமைச்சர் அம்மாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரால்தான் இது நடந்துள்ளது. அவருக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்