மேயர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த நாய்மேயர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த நாய்

 

அமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள ஜர்விங் நகரில் எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள புதிய மேயரை தெரிவு செய்வதற்கான தேர்தலில் நாயொன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தது. எனினும் டிலான் வெஸ்ரி என்ற மேற்படி நாயின்  வேட்பு மனுவானது அது விலங்கு என்பது தொடர்பில் கவனத்திற் கொள்ளப்படுவதற்கு முன் தொழில் நுட்ப தவறுகள் காரணமாக நிராகரிக்கப்பட்டது.

அது தொடர்பில் டிலானின் உரிமையாளரான மைக் ஹாவார்ட் விபரிக்கையில் தனது கையெழுத்தையோ அன்றி டிலானின் அடையாளத்தையோ வேட்பு மனுவில் பதிவு செய்யத்தவறியமையினாலேயே அது நிராகரிக்கப்பட்டது என்று கூறினார். டிலானின் பாத அடையாளத்தை பதிவு செய்வதற்காக அதன் பாதத்தில் மை பூசுவதை தான் விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

ஆசிரியர்