ஜனாதிபதி பிரபாகரன் தப்பியோட வழிவகுத்தார் – நான்தான் தோல்வியடைச் செய்தேன்! – பொன்சேக்காஜனாதிபதி பிரபாகரன் தப்பியோட வழிவகுத்தார் – நான்தான் தோல்வியடைச் செய்தேன்! – பொன்சேக்கா

unnamed (1)

யுத்தத்தின் இறுதி சில நாட்களில், கடைசி இரண்டு நாட்கள் யுத்த முடிவு நாட்களாக ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டதற்குக் காரணம் புலிகளின் தலைவர் பிரபாகரன் தப்பியோடுவதற்கே என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேக்கா குறிப்பிடுகிறார். களுத்துறையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கடைசிப் பகுதியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இரண்டு நாட்களுக்குள் போரை முடிவுக்குக் கொண்டுவருவோம் எனச் சொன்னார். என்னால் முடியாது என்றேன். என்றாலும் அவர் விடாப்பிடியாக நின்றார். தான் கண்மூடித்தனமாக 48 மணித்தியாலங்களில் போர் முற்றுப் பெறும் என்றும் பிரச்சாரம் செய்தார். நடந்தது என்ன?

31 ஆம் திகதி இரவு பிரபாகரன் பாதுகாப்பு அரண்கள்மீது பலத்த தாக்குதல் மேற்கொண்டார். எங்கள் வீரர்களுக்கு முகங்கொடுக்க முடியாமல் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அது பிரபாகரன் இலங்கையை விட்டு தப்பியோடுவதற்கு மேற்கத்தேயத்தின் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி விட்டுவிட்டார் என நான் கருதுகிறேன்.

நாட்டின் நல்ல நேரம். பிரபாகரனால் தப்பியோட முடியவில்லை. அந்நேரத்தில் முழுப் பிரயோசனத்தையும் பெற்று வெற்றியீட்ட வேண்டும் என்ற குறிக்கோள் பிரபாகரனுக்கு இருந்தது. தாக்குதல்கள் பலமாகின. எங்கள் இராணுவத்தினரிலிருந்து சற்றேறக் குறைய 500 பேர் கொலை செய்யப்பட்டார்கள். இன்னும் 300 மீட்டர் நாங்கள் பின்னோக்கி நகர வேண்டிவந்திருந்தால் நாங்கள் இன்றும் யுத்தத்தின் வடுக்களை அனுவித்துக் கொண்டுதான் இருப்போம். என்ன நடந்திருக்கும் என்று நான் சொல்லி அறியத் தேவையில்லை.

நான் யுத்தகளத்தில் பல நாட்களை கடத்திவிட்டு, அப்பாடா பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி அதிகாலை கொழும்புக்கு வந்து, முகங்கழுவிக் கொண்டு சுதந்திர விழாவில் கலந்துகொள்ளச் செல்கிறேன்.. ஆனால், அங்கு இந்நாட்டுத் தலைவர் கையாலாகாத பேச்சுக்களைப் பேசிக்கொண்டு, சிரித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் நானோ அந்நேரம் பெரும் கோபத்துடனேயே நின்றிருந்தேன்.

ஆசிரியர்