செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நவி­பிள்­ளையின் புதிய அறிக்கை போர்க்குற்ற விசாரணைக்கு வழி செய்யவேண்டும் | மன்­னிப்புச் சபையின் இந்­திய தலைமை நிர்­வாகி ஆனந்­த ­பத்­ம­நாபன்நவி­பிள்­ளையின் புதிய அறிக்கை போர்க்குற்ற விசாரணைக்கு வழி செய்யவேண்டும் | மன்­னிப்புச் சபையின் இந்­திய தலைமை நிர்­வாகி ஆனந்­த ­பத்­ம­நாபன்

நவி­பிள்­ளையின் புதிய அறிக்கை போர்க்குற்ற விசாரணைக்கு வழி செய்யவேண்டும் | மன்­னிப்புச் சபையின் இந்­திய தலைமை நிர்­வாகி ஆனந்­த ­பத்­ம­நாபன்நவி­பிள்­ளையின் புதிய அறிக்கை போர்க்குற்ற விசாரணைக்கு வழி செய்யவேண்டும் | மன்­னிப்புச் சபையின் இந்­திய தலைமை நிர்­வாகி ஆனந்­த ­பத்­ம­நாபன்

1 minutes read

 

இலங்கை மீது மனித உரிமை மீறல் மற்றும் போர்க்­குற்­றங்கள் தொடர்பில் சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என ஐ.நா மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை விடுத்­துள்ள பல­மான புதிய அறிக்­கையின் பரிந்­து­ரை­களை செயற்­ப­டுத்த சர்­வ­தேச சமூகம் முன்­வர வேண்டும் என்று சர்­வ­தேச மன்­னிப்புச் சபை கோரிக்கை விடுத்­துள்­ளது.

இலங்­கையில் யுத்தம் முடிந்து ஐந்து வரு­டங்கள் கடந்­துள்ள நிலையில் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் இன்­னமும் நியாயம் வேண்டி நிற்­பது வெட்கப்பட வேண்டிய செயல் என சர்­வ­தேச மன்­னிப்புச் சபையின் இந்­திய தலைமை நிர்­வாகி ஆனந்­த ­பத்­ம­நாபன் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

சர்­வ­தேச போர்க்­குற்ற விசா­ர­ணைக்கு வலி­யு­றுத்தி நவி­பிள்ளை வெளி­யிட்­டுள்ள புதிய அறிக்கை முக்­கி­ய­மா­னதும் அவ­சர மற்றும் கசப்­பான நினை­வூட்­ட­லு­மாகும். இனியும் விசா­ர­ணையில் தாம­திக்க முடி­யாது.

மனித உரிமை மீறல் தொடர்பில் சர்­வ ­தேசம் எடுக்கும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு செவி­சாய்க்­காது சர்­வ­தே­சத்தின் கண்ணில் மண்ணை தூவும் நட­வ­டிக்­கையில் இலங்கை ஈடு­பட்டு வரு­கின்­றது.

எனவே நவி­பிள்­ளையின் புதிய அறிக்கை ஒரு கண் திறப்­பாக இருக்க வேண்டும், இலங்கை மீது போர்க்­குற்ற விசா­ரணை நடத்தும் வலு­வான பிரே­ரணை ஒன்றை ஐ.நா. மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்ற வேண்டும்.

நவி­பிள்­ளையின் கண்­டு­பி­டிப்­புகள் எங்­க­ளது கருத்­து­க­ளுடன் ஒத்­துப்­போ­கின்­றன. இலங்­கையில் இரு தரப்­பி­ன­ராலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றம் குறித்து எமக்கு இன்னும் ஆதாரம் கிடைத்த வண்ணமுள்ளன என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.