Friday, May 7, 2021

இதையும் படிங்க

ஒலிம்பிக் போட்டிகளில் வரலாறு படைக்கவுள்ள திருநங்கை

டோக்கியோ விளையாட்டுக்கு தகுதி பெறுவதன் மூலமாக ஒலிம்பிக்கில் பங்கேற்றும் முதல் திருநங்கை என்ற பெருமையை பளு தூக்குதல் வீரர் லாரல் ஹப்பார்ட் பெறவுள்ளார்.

குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழக வன மந்திரியானார்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர்  சட்டமன்ற தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்ற கா.ராமசந்திரன் தமிழ்நாடு மந்திரி சபையில் இடம் பெற்றுள்ளார்.

லண்டன் ஹரோ நகரின் துணை மேயராக யாழ் தமிழ் பெண் தெரிவு

லண்டனின் வடமேற்குத் திசையில் இருக்கும் ஹரோ (Harrow) பெரிய நகரத்தின் முதல் தமிழ் பெண் துணை மேயராக நகர சபை உறுப்பினரான இலங்கை வசம்சாவளியைச் சேர்ந்த சசிகலா சுரேஷ் தேர்வு...

ராசி இல்லாதவர் என்ற பேச்சுக்கு முடிவு!

இனி வரும் தேர்தல்களில் ம.தி.மு.க. தனிச் சின்னத்தில் போட்டியிடும் என்றும் வைகோ ராசி இல்லாதவர் என்பதற்கு இந்தத் தேர்தலில் முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது எனவும் ம.தி.மு.க. பொதுச் செயலாளரான வைகோவின் மகன்...

மறுஅறிவிப்பு வரை அனைத்து கல்வி செயற்பாடுகளுக்கு முடக்கம்!

நாட்டின் சகல பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மறு அறிவிப்புவரை மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று அச்ச நிலையைக் கருத்திற்கொண்டு இந்த...

கிளிநொச்சியில் பொலிஸார் 21 பேருக்கு கோவிட் தொற்று

கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி மற்றும் அக்கராயன்குளம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 21 பொலிஸாருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று...

ஆசிரியர்

வெட்கமின்றி சவேந்திர சில்வாவை யுத்த வீரர் என மைத்திரி அழைத்தமையே தடைக்கு காரணம்: ஜஸ்மின்

யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ள சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமிப்பதன் மூலம் தேர்தலில் தனக்கு ஆதரவை அதிகரிப்பதற்கு இலங்கை ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சிகளே இலங்கை படையினரை ஐ.நா. அமைதிகாக்கும் படையிலிருந்து தடை செய்யப்படும் நிலைக்கு காரணம் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன், யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் முடிவடைந்துள்ள போதிலும் நிலைமாறுக்கால நீதி நடவடிக்கைகளிற்கு தன்னை அர்ப்பணித்துள்ள போதிலும் இலங்கை வெட்கமின்றி சவேந்திர சில்வாவை இன்னமும் யுத்தவீரர் என அழைக்கின்றது என்றும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை படையினர் அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஐ.நா. தடை செய்துள்ள அறிவிப்பு இலங்கைக்கு துயரமானதாக அமைந்துள்ளது.

ஐ.நா. அமைதிப்படை நடவடிக்கைகளில் இலங்கை படையினர் ஈடுபடுத்தப்படுவது தடை செய்யப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ள சவேந்திர சில்வாவை இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் 2008- 2009களில் சவேந்திர சில்வா இலங்கை இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவிற்கு தலைமை தாங்கினார்.

அவரது படையினர் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான திட்டமிடப்பட்ட தாக்குதல்களை மேற்கொண்டனர் என தெரிவிப்பதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளன. பொதுமக்களிற்கு ஏற்பட்ட உயிரிழப்புகளும் காயங்களும் பேரழிவு என வர்ணிக்கக் கூடியவையாக உள்ளன.

எனினும் யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் முடிவடைந்துள்ள போதிலும் நிலைமாறுக்கால நீதி நடவடிக்கைகளிற்கு தன்னை அர்ப்பணித்துள்ள போதிலும் இலங்கை வெட்கமின்றி சவேந்திரசில்வாவை இன்னமும் யுத்தவீரர் என அழைக்கின்றது.

இதன் காரணமாக யுத்தத்தின் பின்னர் படையணிகளில் இணைந்த இளம் வீரர்கள் ஐ.நா. அமைதிப்படை நடவடிக்கைகளில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளனர்.

சவேந்திர சில்வாவின் நியமனம் இலங்கையின் சொந்தமான துயரமான நடவடிக்கை என தெரிவித்துள்ள ஜஸ்மின் சூக்கா, இலங்கை கடந்த கால குற்றங்களிற்கு நேர்மையான குற்றவியல் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவை பெறுவதையே விரும்புகின்றோம் என தெரிவித்துள்ளார்.

பல வருடங்களாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம், இலங்கையின் பாதுகாப்பு மற்றும் அரச அதிகாரிகள் குறித்து துல்லியமாக விசாரணைகளை மேற்கொண்டுவந்துள்ளது. இலங்கையின் இறுதி யுத்தத்தில் ஒவ்வொரு படைப்பிரிவும் செயற்பட்ட இடம் குறித்து துல்லியமான தகவல்களை பதிவு செய்துள்ளது.

மோதலின் போது உயிர் தப்பிய, நேரில் கண்ட சாட்சியங்களான நூற்றுக்கணக்கானவர்களிடமிருந்து பெறப்பட்ட விரிவான தகவல்களை அடிப்படையாக கொண்டதாக இந்த ஆராய்ச்சி அமைந்துள்ளது.

யுத்தம் இடம்பெற்றவேளை இலங்கை இராணுவம் வெளியிட்ட நாளாந்த களநிலைமை குறித்த இணையப் பதிவுகளையும் நாங்கள் ஆராய்ந்துள்ளோம். எனினும் இலங்கை இராணுவம் தற்போது அதனை இணையத்திலிருந்து அகற்றியுள்ளது.

சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டதாக நம்பகத்தன்மை மிக்க குற்றச்சாட்டுகள் எந்த பகுதியிலிருந்து எழுந்தனவோ அந்த பகுதியில் நிலைகொண்டிருந்த படையணியை அடையாளம் காண்பதற்கு விரிவான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

குறிப்பிட்ட படையணியுடன் தொடர்புபட்டவர்களை ஐக்கிய நாடுகள் படையணியில் ஈடுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை தெரிவிப்பதற்காகவே இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளோம்.

இலங்கை இராணுவத்தை பொறுப்புக்கூறச் செய்யவேண்டும் என கருதும் பல சிங்களவர்களும் தமிழர்களும் நேரடியாக இந்த ஆராய்ச்சிக்கு உதவியுள்ளனர் என தெரிவித்துள்ள ஜஸ்மின் சூக்கா அவர்களிற்கு நாங்கள் நன்றிக்கடன் உடையவர்களாகவுள்ளோம். ஆனால் பாதுகாப்பு காரணங்களிற்காக அவர்களின் பெயர் விபரங்களை வெளியிட முடியாது என தெரிவித்துள்ளார்.

இதுவரை நீதியை அனுபவித்திராத பாதிக்கப்பட்ட தமிழர்களிற்கு ஐ.நா. நடவடிக்கை எடுக்கின்றது என்ற செய்தி நம்பிக்கையை அளித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.வின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள படையினர் தமது காலம் முடியும் வரை பணியை தொடர்வார்கள் பின்னர் வேறு ஒரு நாட்டின் படையினர் அந்த இடத்தை நிரப்புவார்கள் என்பதே தற்போது வெளியாகியுள்ள தகவல்.

எனினும் ஐ.நா. அமைதிப்படை கடுமையான ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டிய சந்தர்ப்பம் உருவானால் இந்த தடை கைவிடப்படலாம் எனவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐ.நா. மேலதிகமான தெளிவுபடுத்தல்களை வழங்கவேண்டும் என நாங்கள் எதிர்பார்ப்போம் என தெரிவித்துள்ள ஜஸ்மின் சூக்கா, இந்த முக்கியமான மனித உரிமை விவகாரத்திலிருந்து தப்ப நினைத்தால் ஐ.நா.வின் அமைதிகாக்கும் படையணியின் கௌரவம் பாதிக்கப்படலாம் எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க

ராஜஸ்தானில் 90 அடி ஆழமுள்ள ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்பு!

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் திறந்துக் கிடந்த 90 அடி ஆழமுள்ள ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான். ஜாலூர் மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சிறுவனை...

அனைத்து சவால்களையும் முறியடித்தே தீருவோம்!

தமது ஆட்சியில் இலங்கை எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும் அனைத்தையும் முறியடித்தே தீருவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ்,...

இலங்கையில் பைசர் கொரோனா தடுப்பூசிப் பயன்பாட்டுக்கு அனுமதி!

இலங்கையில் பைசர் (pfizer) கொரோனா தடுப்பூசிப் பாவனைக்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, 50 இலட்சம் பைசர் தடுப்பூசிகளை...

கொரோனாவின் தீவிரம் இந்த மாத மத்தியில் குறைவடைய வாய்ப்பு!

கொரோனா வைரஸ் தொற்றின் எழுச்சி, இந்த மாத மத்தியிலிருந்து சரியத்தொடங்கும் என்று பிரபல தடுப்பூசி நிபுணர் ககன்தீப் காங் நம்பிக்கையூட்டும் தகவலை வெளியிட்டிருக்கிறார். இந்திய பெண்...

முடங்கியது திருகோணமலை நகரம்!

திருகோணமலை மாவட்டத்தில் அதிக கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டதைத் தொடர்ந்து பல கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திருகோணமலை நகர்ப் பகுதியில் மருந்தகங்கள், அத்தியாவசியத்...

கொவிட்-19 க்கு எதிரான போராட்டத்துக்காக கோலியும் அனுஷ்காவும் 2 கோடி உதவி

கொவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான நாட்டின் போராட்டத்தை ஆதரிக்க மொத்தம் 7 கோடி இந்திய ரூபா நிதி திரட்டும் திட்டத்திற்கு இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலியும் அவரது...

தொடர்புச் செய்திகள்

68 பொலிஸ் பிரிவுகளில் ஊடங்கு சட்டம் அமுலில் உள்ளது

மொறட்டுவை, பாணந்துறை வடக்கு, பாணந்துறை தெற்கு மற்றும் ஹோமாகமை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இரவு முதல் உடன் அமுலாகும்...

தேசிய விளையாட்டுச் சபை தலைவராக மஹேல ஜெயவர்த்தன

தேசிய விளையாட்டுச் சபை தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் குமார் சங்கக்கார, கஸ்தூரி வில்சன், சவேந்திர சில்வா உள்ளிட்ட 14...

வடக்கில் இராணுவக் குறைப்பு மேற்கொள்ளப்படலாம் – யாழில் இராணுவத் தளபதி தெரிவிப்பு

தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் தேவையேற்பட்டால், வடக்கில் இராணுவக் குறைப்பு மேற்கொள்ளப்படலாம் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். யாழில் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது, மேலும் தெரிவித்துள்ள...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மணிவண்ணன் மேற்கொண்ட நடவடிக்கை சட்டத்திற்கு எதிரானதா?

யாழ்.மாநகரத்தினை தூய்மைப்படுத்தல் தொடர்பில் மாநகர முதல்வர் வி;.மணிவண்ணன் எடுத்த நடவடிக்கைகள் சில அண்மையில் பல சர்ச்சைகள், மற்றும் மாநகர சபையின் அதிகாரங்களை கேள்விக்குட்படுத்தும்...

பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய விஷால்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தனது 31வது படத்தின் படப்பிடிப்பை பூஜை போட்டு தொடங்கி இருக்கிறார்.தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தற்போது எனிமி படத்தில்...

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கேழ்வரகு அவல் கொழுக்கட்டை

கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் உணவில் கேழ்வரகை சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று கேழ்வரகு அவல் கொழுக்கட்டை செய்முறையை பார்க்கலாம்.கேழ்வரகு அவல் கொழுக்கட்டைதேவையான பொருட்கள்...

மேலும் பதிவுகள்

டொரண்டோ தமிழ் இருக்கை | கனடா பாராளுமன்றத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பட்டியலில் அடக்க முடியாத சிறப்புகளைக் கொண்ட தமிழ் மொழியின் இலக்கிய வளம் உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லப்படவேண்டும். அதற்கு உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ்...

மூன்று நாயகிகளுடன் இணையும் நடிகர் கதிர்

'பரியேறும் பெருமாள்', 'சர்பத்' ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் கதிர் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில், மூன்று நாயகிகள் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தஜிகிஸ்தானுடனான எல்லை மோதலில் மூன்று கிர்கிஸ் வீரர்கள் பலி

தஜிகிஸ்தானுடனான எல்லை மோதலில் மூன்று கிர்கிஸ்தான் எல்லை ரோந்து முகவர்கள் கொல்லப்பட்டதுடன் 22 பேர் காயமடைந்துள்ளதாக கிர்கிஸ் தேசிய பாதுகாப்புக் குழுவின் அரச எல்லைக் காவலர் சேவை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

ஆர்மேனியர்களுக்கு ஈழத்தமிழர்களாகிய நாம் தோழமை | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

ஆர்மேனிய இனவழிப்பை அங்கீகரித்த அதிபர் பைடன் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத்தனை பாரட்டுவதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், ஈழத்தமிழர்களாகிய நாம் ஆர்மேனியர்களுடன் தோழமை...

சுவையும் சத்தும் கொண்ட ராகி நூடுல்ஸ்!

தேவையானவைராகி நூடுல்ஸ் - 2 கப்வெங்காயம் - 1 கப் (நீளவாக்கில் நறுக்கியது)குடை மிளகாய் - கால் கப் (பொடியாக நறுக்கியது)முட்டைகோஸ் - 1 கப் (பொடியாக நறுக்கியது)வெங்காயத்தாள் -...

தனிமைப்படுத்தல் விதிகளுக்கு முரணான விருந்துபசாரங்கள் தொடர்பில் கண்காணிப்பு

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு முரணாக இடம்பெறுகின்ற மதுபான விருந்துபசாரங்கள் தொடர்பில் விசேட கண்காணிப்புக்களை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பிந்திய செய்திகள்

ராஜஸ்தானில் 90 அடி ஆழமுள்ள ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்பு!

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் திறந்துக் கிடந்த 90 அடி ஆழமுள்ள ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான். ஜாலூர் மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சிறுவனை...

அனைத்து சவால்களையும் முறியடித்தே தீருவோம்!

தமது ஆட்சியில் இலங்கை எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும் அனைத்தையும் முறியடித்தே தீருவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ்,...

இலங்கையில் பைசர் கொரோனா தடுப்பூசிப் பயன்பாட்டுக்கு அனுமதி!

இலங்கையில் பைசர் (pfizer) கொரோனா தடுப்பூசிப் பாவனைக்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, 50 இலட்சம் பைசர் தடுப்பூசிகளை...

துயர் பகிர்வு