ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய காட்சியையோ அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையோ ஆதரிக்க போவதில்லை என்று கூறியிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம சிறந்த ஒரு வேட்பாளருக்கே எனது வாக்கினை பதிவு செய்ய போவதாக குறிப்பிட்டார்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக பதவியேற்று 25 வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு அவரை பாராட்டுவதற்கு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்வதற்கான சுதந்திர காட்சியின் மூலம் கலந்துரையாடல் ஒன்று கிராண்ட் ஓரியன்ட் ஹோட்டலில் இடம்பெற்றது அதனை தொடர்ந்து ஊடகவியலாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டில் தற்போது காணப்படும் கடன் தொகைகளை சீர்செய்து நாட்டினை முன்னோக்கி  கொண்டு செல்வதற்கு கல்விகற்ற , இளம் தலைமுறை ஜனாதிபதி ஒருவரையே நாடு தற்போது எதிர் பார்த்து நிற்கின்றது,

ஜனாதிபதி தேர்தலில் நான் ஒரு போதும் ஐ.தே.க மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு ஆதரவை வழங்க போவதில்லை, இது தொடர்பில் கடந்த ஆறு மாதங்களாக நான் பல கருத்துக்களை வெளியிட்டுள்ளேன், நான் எனது வாக்கினை சிறந்த ஒரு வேட்பாளருக்கு  வழங்குவேன்,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து பிரிந்து சென்ற சிலர் மொட்டுக்கு ஆதரவளிப்பதில்லை கோத்தபாயாவிற்கே எங்களின் ஆதரவு என்று கருதிகளை வெளியிடுகின்றனர். கோத்தபாய ஜனாதிபதி தேர்தலில் மொட்டை முன்னிலை படுத்தியே போட்டியிடுகிறார் எனவே மொட்டும் கோத்தபாயவும் வெவ்வேறு இல்லை என்றும் கூறினார்.