ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை சுரண்டிய 3 மலேசியர்கள் கைது
பாலியல் ரீதியாகவும் விவசாயத் துறையிலும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை சட்டவிரோதமான முறையில் சுரண்டியதாக மூன்று மலேசியர்களை ஆஸ்திரேலிய எல்லைப்படை கைது செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் பெர்த் புறநகர் பகுதியில், பாலியல் ரீதியாக வெளிநாட்டுப் பெண்களை சுரண்டி வந்த 25 வயது பெண்ணும் அவரது ஆண் துணையும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதின் போது நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், 500 சிம் கார்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இத்துடன் மற்றுமொரு விசாரணையில், விவசாயத் துறையில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை சுரண்டி பணமோசடியில் ஈடுபட்டதாக 43 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது கைது செய்யப்பட்ட மூன்று மலேசியர்களும் முறையான விசாயின்றி ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் விரைவில் நாடுகடத்தப்படக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.