செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் முதலை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் குயின்ஸ்லாந்து மீனவர் மாயம்

முதலை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் குயின்ஸ்லாந்து மீனவர் மாயம்

0 minutes read

வடக்கு குயின்ஸ்லாந்தில் முதலை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் ஒரு மீனவரைக் காணவில்லை என வெளியான தகவலையடுத்து, மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

65 வயதான லாரா என்ற நபர், சனிக்கிழமை பிற்பகல் லேக்ஃபீல்டில் உள்ள ரின்யிர்ரு தேசிய பூங்காவில் உள்ள கென்னடி ஆற்றங்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், அவர் காணாமல் போனதாக அருகில் இருந்தவர்களால் குயின்ஸ்லாந்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

அதனையடுத்து, முன்னெடுக்கப்பட்ட மீட்பு பணிகள் சனிக்கிழமை இரவு நிறுத்தப்பட்டு வனவிலங்கு அதிகாரிகளின் உதவியுடன் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் தொடங்கின.

மேற்கு ஆஸ்திரேலியாவில், 11 வயது சிறுவன், சுறா கடித்ததால், தீவிரமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியான சில மணி நேரங்களின் பின்னர் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.