புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஹயஸ் மோதி வயோதிபர் ஒருவர் மரணம்!

ஹயஸ் மோதி வயோதிபர் ஒருவர் மரணம்!

0 minutes read

வீதி விபத்தில் வயோதிபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

வீதியால் நடந்து சென்ற குறித்த நபரை பின்னால் வேகமாக வந்த ஹயஸ் வான் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு பிரதேசத்தில் இன்று (14) காலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நீர்கொழும்பில் வசிக்கும் 77 வயதுடைய வி.பழனியப்பா என்ற நபரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற ஹயஸ் வாகனத்தின் சாரதியை வீதிப் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் துரத்திப் பிடித்துள்ளனர்.

உயிரிழந்த வயோதிபரின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.