December 3, 2023 1:50 am

விண்வெளியில் கீழே வீசப்பட்ட பை… பூமியில் இருந்தும் பார்க்க முடியும்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனத்தைச் (NASA) சேர்ந்த இரு விண்வெளி வீரர்கள் தெரியாமல் கீழே போட்ட கருவிகளைக் கொண்ட பை மிதந்துகொண்டே இருக்கிறது.

ஜாஸ்மின் மோக்பெலியும் (Jasmin Moghbeli) லோரல் ஓ ஹாராவும் (Loral O’Hara) சர்வதேவ விண்வெளி நிலையத்தைச் சுற்றி நடந்துகொண்டிருக்கும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

விண்வெளியில் கீழே வீசப்பட்ட பை

இருவரும் நிலையத்திற்கு வெளியே சுமார் 7 மணிநேரத்திற்கு மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பை விண்வெளிக் குப்பையாய் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதைப் பூமியிலிருந்து தொலைநோக்கியைக் கொண்டு காணமுடியும் என்றும், வரும் மாதங்களில் அது பூமிக்குள் வரும் என்றும் அப்போது அது எரிந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்