கோபுர கலசத்தில் தானியம் நிரப்புவது ஏன் ? நெல் ,கம்பு , கேழ்வரகு ,தினை, வரகு ,சோளம் , மக்காசோளம் , சாமை என் ஆகியவை கோபுர கலசத்தில் இருக்கும் குறிப்பாக தானியம் அதிகமாக இருக்கும் . குறிப்பாக தானியம் அதிகமாக இருக்கும்.
காரணம் என்னவென்றால் ‘வரகு ‘ மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றது என அந்த காலத்திலேயே அறிந்து வைத்துள்ளார்கள் இந்த நுட்பம் மிகவும் சரியான விஷயம் என இப்போதுள்ள அறிவியல் கூறுகிறது.
இயற்கை சீற்றத்தினால் விவசாயம் அழிந்து போனாலும் மீண்டும் விவசாயம் செய்ய தானியங்களை கோபுர கலசத்திலிருந்து எடுத்து பயன்படுத்தலாம்.
இந்த தானியங்கள் சக்தியை 12வருடங்கள் வரை தாக்கு பிடிக்கக்கூடியது. அதற்கு தானியங்கள் தன் சக்தியை இழந்து விடும் என்பதால் பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது.