செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு மீசாலை வடக்கு கட்டு வைரவர் ஆலயத்தின் வருடாந்த மாசிமக விரத உற்சவம்

மீசாலை வடக்கு கட்டு வைரவர் ஆலயத்தின் வருடாந்த மாசிமக விரத உற்சவம்

0 minutes read

பழமை வாய்ந்த யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மீசாலை வடக்கு கட்டு வைரவர் ஆலய மாசிமக விரத உற்சவம், கடந்த திங்கட்கிழமை (02) மிகவும் சிறப்பாகவும், பக்திபூர்வமாகவும் நடைபெற்றது.

காலை விசேட பொங்கலைத் தொடர்ந்து, முற்பகல்11.30 மணியளவில் வைரவப் பெருமானுக்கு விசேட அபிஷேகம் நடைபெற்றது. பிற்பகல் 01.15 மணியளவில் விசேட பூஜை, மடை வழிபாடுகளைத் தொடர்ந்து, அடியவர்களுக்கு அன்னதானமும் பரிமாறப்பட்டது.

மேற்படி ஆலயப் பிரதமகுரு நடேசன் குகநாதன் மாசிமக விரத உற்சவக் கிரியைகளைச் சிறப்புற நிகழ்த்தினார்.

கிராமிய வழிபாடு இன்றுவரை அழியாது பின்பற்றப்பட்டு வருகின்ற ஈழத்து ஆலயங்களில் இவ் ஆலயமும் ஒன்றாகத் திகழ்கின்றது.

வயல்களின் நடுவே சிறியதொரு ஆலயமாக இயற்கை அழகுற அமைந்துள்ள இவ் ஆலயத்தில் நித்திய பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருவதுடன், வருடாந்தம் மாசிமக விரத உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.