செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை ஓஷடி குருப்பு காலமானார்

முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை ஓஷடி குருப்பு காலமானார்

0 minutes read

இலங்கையின் முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை ஓஷடி குருப்பு தனது 27 ஆவது வயதில் காலமானார்.

ஓஷடிக்கு 2020 ஆம் ஆண்டு இரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, பின்னர் இரண்டு வருடங்களாக புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் செவ்வாய்கிழமை (08) உயிரிழந்துள்ளார்.

கொழும்பு விசாகா கல்லூரியின் பழைய மாணவியான அவர், சிறுவயதிலிருந்தே பேட்மிண்டன் விளையாட்டில் சிறந்து விளங்கியதுடன், 2015 ஆம் ஆண்டு சர்வதேச மட்டத்தில் போட்டியிடவும் செய்தார்.

அதுமட்டுமின்றி 2016 ஆசிய பூப்பந்து சாம்பியன்ஷிப் மற்றும் 2017 ஆம் ஆண்டு சம்மர் யுனிவர்சியேட் ஆகியவற்றிலும் ஓஷடி நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.