செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்!

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்!

1 minutes read

நியூஸிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து அணி, இன்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆட்டநேர முடிவில், கொலின் டி கிராண்ட்ஹோம் 54 ஓட்டங்களுடனும் டேரில் மிட்செல் 29 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், நியூஸிலாந்து அணி 207 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கான அணி, 364 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சரேல் எர்வீ 108 ஓட்டங்களையும் டீன் எல்கர் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், நெய்ல் வாக்னர் 4 விக்கெட்டுகளையும் மெட் ஹென்ரி 3 விக்கெட்டுகளையும் கெய்ல் ஜேமீசன் 2 விக்கெட்டுகளையும் டிம் சவுத்தீ 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய நியூஸிலாந்து அணி, இன்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இன்னமும் 5 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தை நியூஸிலாந்து அணி நாளை தொடரவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.