செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு இலங்கை – இந்தியா முதல் டெஸ்ட் போட்டி | 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி

இலங்கை – இந்தியா முதல் டெஸ்ட் போட்டி | 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி

0 minutes read

மார்ச் 4 அன்று மொஹாலியில் ஆரம்பமாகும் இலங்கை – இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியினை பார்வையிடுவதற்கு 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விராட் கோலியின் 100 ஆவது டெஸ்ட் போட்டியாக இருக்கும் இந்த போட்டி, கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக மூடிய கதவுகளுக்கு பின்னால் விளையாடுவதற்கு முதலில் திட்டமிடப்பட்டது. 

எனினும் போட்டி தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, பார்வையாளர்கள் போட்டியை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்திருந்தது.

அதன்படியே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஒரு அறிக்கையில் உறுதிபடுத்தியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.