இலங்கை செக்வோல் சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட 2022ஆம் ஆண்டின் செக்வோல் தேசிய அணிக்கு 11 வீரர்களை இணைத்து கொள்வதற்கு நடாத்தப்பட்ட பரீட்சையில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த எம்.எச்.சபீர் அலி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் (தேசிய பாடசாலை) விளையாட்டு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றும் இவர், இவ்வணியில் இணைந்து கொள்வதற்கு நடைபெற்ற அனைத்து பலப்பரீட்சைகளிலும் சிறந்த புள்ளிகளை பெற்று ஆசிய பசுபிக் சம்பியன் தரப்படுத்தலில் ஆறாம் இடத்தை பிடித்து இலங்கையின் தேசிய அணிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.