Tuesday, October 20, 2020

இதையும் படிங்க

மொகல் ஈ ஆஸம் | திரைக்கு பின்னால் மகத்தான காதல்

மொகல் ஈ ஆஸம் - திரைக்கு பின்னால் நடந்த மகத்தான காதல் ( தோல்வி) கதை

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 5 | பத்மநாபன் மகாலிங்கம்

கொல்லனாறு, நீலனாறு என்பவை காட்டாறுகளாகும். பெரிய பரந்தன் விவசாயிகள் இந்த காட்டாறுகளை மறித்து அணை கட்டி, வாய்க்கால்கள் மூலம் வயல்களுக்கு நீர் பாய்ச்சினர். கால போகத்தின் போது மழை நீரும்,...

கொரோனாவால் ட்ரம்ப் கடுமையாக பாதிக்கப் பட்டால் என்ன நேரும்?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது.

தமிழ்க் கட்சிகளின் கூட்டு நிலைக்குமா?

கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பல்கலைக்கழக மாணவர்கள்...

நானாட்டான் நாணயங்கள் பாண்டியருக்கு உரியதா? | பேராசிரியர் புஸ்பரட்ணம்

18.09.2020 அன்று மன்னார் மாவட்டத்தில்  நானாட்டான் சந்திக்கு அருகில் உள்ள வடக்கு வீதி என்ற இடத்தில் வீடு கட்டுவதற்காக...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 4 | பத்மநாபன் மகாலிங்கம்

வனம் அதிக வளங்களைக் கொண்டது. விலங்குணவு சாப்பிடுவோருக்கு உடும்பு, முயல், பன்றி, மான், மரை, கௌதாரி, காட்டுக்கோழி, காடை, மயில் என்று பலவற்றின்...

ஆசிரியர்

மாற்று அணிக்கு முன்னாலுள்ள பணி | நிலாந்தன்

இம்முறை தமிழ் மக்கள் கூட்டமைப்பின் ஏகபோகத்தை நிராகரித்து இரண்டு மாற்று அணிகளுக்கு மூன்று இடங்களை வழங்கியிருக்கிறார்கள். கடந்த பதினோரு ஆண்டுகளாக தமிழ் அரசியலில் கூட்டமைப்பு ஏக பிரதிநிதிகளாக  வீற்றிருந்தது. கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்றவர்கள் வெல்ல முடியாது என்றும் மார் தட்டியது. ஒரு தும்புத்தடியை மக்கள் முன்வைத்து அதற்கு வாக்களியுங்கள் என்று கேட்டாலும் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்று இறுமாப்போடு இருந்தது. ஆனால் அந்த இறுமாப்பு இந்த முறை சோதனைக்கு உள்ளாகியிருக்கிறது. மாற்று அணியை சேர்ந்த மூவர் இம்முறை நாடாளுமன்றத்துக்கு செல்கின்றார்கள்.மாற்று அணியை பொறுத்தவரை இது வெற்றியின் தொடக்கம். தமிழ் அரசியலை பொறுத்தவரை இது மாற்றத்தின் தொடக்கமாக அமையுமா?

முதலில் மாற்று எதுவென்பதை அதன் சரியான பொருளில் விளங்கிக் கொள்ள வேண்டும். கூட்டமைப்புக்கு எதிராக நிற்பது மாற்று அல்ல. கூட்டமைப்பு செய்யும் எல்லாவற்றையும் விமர்சிப்பதும் மாற்று அல்ல. நாடாளுமன்றத்தில் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளும் எல்லாவற்றையும்  எதிர்ப்பதும் மாற்று அல்ல.அல்லது நாடாளுமன்றத்தில் கூட்டமைப்பின் நண்பர்களுக்கு எதிராக வாக்களிப்பது மாற்று அல்ல. மாற்று  இவை எல்லாவற்றையும் விட ஆழமானது. அது ஒரு புதிய பண்பாடு. அது ஒரு புதிய அரசியல் செயல் வழி. 2009-க்கு பின்னரான தமிழ் அரசியலை அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னெடுப்பதற்கு தேவையான ஓர் அரசியல் செயல் வழி. தமிழ் மக்களிடம் இப்பொழுது ஆயுதப்போராட்டம் இல்லை. மக்கள் இயக்கங்களும் இல்லை. இருப்பதெல்லாம் தேர்தல் அரசியல்தான். எனவே மாற்றத்தை அங்கிருந்தே தொடங்கலாம். எப்படித் தொடங்கலாம்?

மாற்றத்தை விரும்பும் தரப்புக்கள் தேர்தல் மூலம் மக்கள் ஆணையைப் பெறவேண்டும். அதை அதன் சரியான பொருளில் சொன்னால் மக்கள் அதிகாரத்தைப் பெற வேண்டும். அந்த மக்கள் அதிகாரத்தை வைத்துக் கொண்டு அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டும். இந்த இடத்தில் ஒரு விடயத்தைச்  சுட்டிக்காட்ட வேண்டும். தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளுக்கு கொடுக்கும் அதிகாரம் எனப்படுவது நாடாளுமன்றத்தில் பெருமளவுக்குச்  செல்லுபடியாகாது. அது பெரும்பான்மையினரின் நாடாளுமன்றம். அங்கே தமிழ் மக்களுக்கு மிக அரிதாகவே பேரம் பேசும் சக்தி கிடைக்கும். ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் அப்படி ஒரு பேரபலம் கிடைத்தது. ஆனால் இப்போதுள்ள ராஜபக்சவின் அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கு பேரபலம் இருக்கப் போவதில்லை. அதனால் நாடாளுமன்றத்தின் தீர்மானங்களை மாற்றும் சக்தி தமிழ் மக்களுக்கு இருக்கப் போவதில்லை. எனவே இந்த நாடாளுமன்றத்தையும் அதன் இயல்பையும் தமிழ் பிரதிநிதிகளுக்கு அதில் இருக்கக்கூடிய வரையறைகளையும் முதலில் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும். அப்படி என்றால் நாடாளுமன்றத்துக்கு போய் ஒரு பயனும் இல்லையா?

அப்படியும் சொல்ல முடியாது. பயன் உண்டு. நாடாளுமன்றத்தை ஒரு மேடையாகப் பயன்படுத்தலாம். தமிழ் பிரதிநிதிகள் தமது கருத்தை உலகத்துக்கு எடுத்துரைப்பதற்கு நாடாளுமன்றம் ஒரு மிகச் சிறந்த மேடை.விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் அண்மையில் ஆற்றிய உரைகள் நல்ல தொடக்கங்கள். எனவே குறைந்தபட்சம் நாடாளுமன்றத்தை ஒரு பிரச்சார மேடையாகவாவது பயன்படுத்தலாம். ஆனால் அதற்குமேல் ஆசைப்படும் அளவுக்கு இப்போது இருக்கும் நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களுக்கு பேரம் இல்லை.எனவே நாடாளுமன்றத்தில் ஒரு கட்டத்துக்கு மேல் எதையும் செய்ய முடியாது.ஆயின் அடுத்த கட்டம் என்ன?

அடுத்த கட்டம் எது என்பதனை மாற்று அணியின் இறுதி இலக்கு எது என்பதே தீர்மானிக்கின்றது. மாற்று அணியை சேர்ந்த இரண்டு கட்சிகளும் சமஸ்டி தீர்வை முன்வைக்கின்றன. அப்படி என்றால் அந்த சமஸ்டியை எப்படி அடைவது? சமஸ்ரிக்கு அரசாங்கம் ஒத்துக் கொள்ளாது. மாகாணசபைக்கு எதிரான ஒருவரான ஓய்வு பெற்ற ரியல் அட்மிரல் சரத் வீரசேகர  அதற்குப் பொறுப்பான ராஜாங்க அமைச்சராக  நியமிக்கப்பட்டிருக்கிறார். பதவியேற்றதும் அவர் பின்வருமாறு தெரிவித்திருக்கிறார்.. “ நான் 13 ஆவது திருத்தத்தை மிகக் கடுமையாக எதிர்த்தவன்.மாகாண சபைகள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டதை விதியின் நகைச்சுவையாகவே கருதுகின்றேன்.எந்த சந்தர்ப்பத்திலும் காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்கப்போவதில்லை என்பதை தெளிவாக கூறிக்கொள்கிறேன்” ஆயின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஒரு சமஸ்டிக் கட்டமைப்பை ராஜபக்சக்கள் தரப்போவதில்லை. அப்படி என்றால் அதை எப்படிப் பெறுவது?

இக்கேள்விக்கு விடை காண்பது என்றால் இலங்கைதீவில் இதுவரையிலும் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகளை பற்றி ஒரு பிரேத பரிசோதனை வேண்டும். கடந்த தசாப்தங்களில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான சமாதான முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இரண்டு  சமாதான முயற்சிகள்தான் ஒப்பீட்டளவில் வெற்றி பெற்றன. அவற்றின் விளைவுகளும் நீண்டகாலத்துக்கு நீடித்திருந்தன. இவ்வாறு இரண்டு சமாதான முயற்சிகளை இனங்காணலாம். முதலாவது இந்திய-இலங்கை உடன்படிக்கை. இரண்டாவது நோர்வேயின் அனுசரணையுடனான ரணில்-பிரபாகரன் உடன்படிக்கை.

இதில் முதலாவது இந்திய இலங்கை உடன்படிக்கை. அதன் பிரகாரம் தான் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.இன்று வரையிலும் நடைமுறையில் உள்ளன. மற்றது நோர்வேயின் அனுசரணையுடனான சமாதானம். இது கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் நீடித்தது. தமிழ் மக்களை ஒரு தரப்பாக ஏற்றுக் கொண்டு எழுதப்பட்ட ஓர் உடன்படிக்கை இது.

இந்த இரண்டு உடன்படிக்கைகளுக்கும் ஒரு பொது இயல்பு உண்டு. அது என்னவெனில் இவை இரண்டும் வெளித் தரப்புகளின் அழுத்தங்களால் அல்லது கண்காணிப்புகளால் நிறைவேற்றப்பட்டவைதான். இந்திய-இலங்கை உடன்படிக்கையை  அமுல்படுத்துவதற்கு இந்திய அமைதி காக்கும் படை நாட்டிற்குள் இறக்கப்பட்டது. ரணில்-பிரபாகரன் உடன்படிக்கையை கண்காணிப்பதற்கு இணை அனுசரணை நாடுகளின் தலைமையின் கீழ் ஸ்கண்டிநேவிய போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு இறக்கப்பட்டது. அதாவது இந்த இரண்டு உடன்படிக்கைகளையும் கண்காணிக்கவும் நடைமுறைப்படுத்தவும் வெளி அழுத்தம் அல்லது அனுசரணை அல்லது படைப் பிரசன்னம் அல்லது யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுக்களின் பிரசன்னம் போன்றன தேவைப்பட்டன. எனவே தொகுத்துப் பார்த்தால் வெளி அழுத்தங்களின் பின்னணியில்தான் இவ்விரு உடன்படிக்கைகளும் நிறைவேற்றப்பட்டன. அல்லது குறிப்பிடத்தக்க காலம் உயிர் வாழ்ந்தன.

இவ்விரண்டையும் தவிர மற்றொரு ஆகப்பிந்திய  தீர்வு முயற்சியையும் இங்கு சுட்டிக்காட்டலாம். ஐநாவின் அனுசரணையோடு முன்னெடுக்கப்பட்ட ஒரு தீர்வு முயற்சி அது.2015  ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட முப்பதின் கீழ் ஒன்று  தீர்மானமே அது. இத்தீர்மானத்தின் மூலம் இலங்கைதீவில் நிலைமாறுகால நீதியை  ஸ்தாபிப்பதற்கு அப்போது இருந்த ரணில்-மைத்திரி அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. நிலைமாறுகால நீதியின் மீள நிகழாமை என்ற பிரிவின் கீழ் இலங்கைதீவின் யாப்பை மாற்றவும் ஒப்புக்கொண்டது.புதிய யாப்பு இனப்பிரச்சினைக்கான தீர்வையும் உள்ளடக்கியிருக்கும்.அதன்படி நாடாளுமன்றம் சாசனப்  பேரவையை மாற்றப்பட்டு யாப்புருவாக்க முயற்சிகள் தொடக்கப்பட்டன. இந்த முயற்சிகளை ஐநா தொடர்ச்சியாகக் கண்காணித்தது. இலங்கை தீவை தன்னுடைய செல்வாக்கு வளையத்துக்குள் ஐநா தொடர்ச்சியாகப் பேணியது. ஐநாவின் சிறப்பு தூதுவர்களும் ஏனைய  தூதுவர்களும் இலங்கைக்குள் அடிக்கடி வந்து போயினர். தவிர ஐநாவை  பின்னிருந்து இயக்கிய மேற்கு நாடுகளின் தலைவர்களும் தூதுவர்களும் இராஜதந்திரிகளும் நிலைமாறுகால நீதியை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தின் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் அழுத்தங்களை பிரயோகித்தார்கள். ஆனால் அம்முயற்சிகள் அனைத்தையும் மைத்திரிபால சிறிசேன 2018 ஒக்டோபர் மாதம் தோற்கடித்து விட்டார்.

இலங்கைத்தீவின் நாடாளுமன்றம் நிலைமாறுகால நீதியை ஐநா பரிந்துரைக்கும் அதன் முழுமையான வடிவத்தில் ஏற்றுக்கொள்ளாது என்பதே கடந்த ஐந்து ஆண்டுகால அனுபவம் ஆகும். அதிலும் குறிப்பாக ரணில் மைத்திரி அரசாங்கத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை எனப்படுவது ஒப்பீட்டளவில் பல்லினத் தன்மை மிக்க மகத்தான ஒரு மக்கள் ஆணை. அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்துக்கொண்டு ஐநா இலங்கைத்தீவில் நிலைமாறுகால நீதியை முன்னெடுக்க முயற்சித்தது. ஆனால் அது தோற்கடிக்கப்பட்டது. இப்பொழுது இருப்பதோ தனிச் சிங்கள வாக்குகளால் கட்டி எழுப்பப்பட்டது என்று காட்டப்படும் ஒரு மூன்றில் இரண்டு பெரும்பான்மை. இந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்துக்கொண்டு நிலைமாறுகால நீதியை முன்னெடுக்க முடியுமா?

அது கஷ்டம் என்ற காரணத்தால் தான் சம்பந்தர் வெளி அழுத்தத்தை வேண்டி நிற்கிறார். இந்தியா எம் பின்னால் நிற்கிறது என்று அவர் கூறுவது அதனால்தான். அதாவது நிலைமாறுகால நீதியை அதன் சிதைந்த வடிவத்திலாவது  நடைமுறைப்படுத்துவதற்கு வெளிநாடுகளின் அழுத்தம் தேவை என்று பொருள்.

மேற்கண்ட மூன்று அனுபவங்களையும் தொகுத்து சிந்தித்தால் ஒன்று தெளிவாக தெரியவரும். வெளி அழுத்தம் அல்லது மூன்றாவது தரப்பின் தலையீடு என்ற ஒரு விவகாரம் இல்லையென்றால் இலங்கைத்தீவில் இரண்டு இனங்களுக்கும் இடையே இணக்கம் ஏற்பட வாய்ப்பில்லை. அப்படி என்றால் அந்த அழுத்தத்தை எப்படி உருவாக்குவது? அதுவும் அரசற்ற  தரப்பாகிய  தமிழ் மக்கள் அதை எப்படி உருவாக்குவது? நாடாளுமன்றத்தில் நெருப்பைக் கக்கும் உரைகளின் மூலம் மட்டும் அது உருவாகாது. நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகளைச் சந்தித்து விட்டுக்கொடுப்பற்ற  நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவதன் மூலம் மட்டும் அது உருவாகாது. அப்படி என்றால் இலங்கை அரசாங்கத்தின் மீது வெளித் தரப்புக்கள் நிர்ப்பந்தங்களைப் பிரயோகிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

இதுதான் கேள்வி. இந்தக் கேள்விக்கு பொருத்தமான தீர்க்கதரிசனம் மிக்க விடையை கண்டுபிடிப்பதில் தான் மாற்று அணி என்பது ஒரு புதிய அரசியல் செயல் வழியைத்  திறக்க முடியும். கூட்டமைப்பு செய்தவை எல்லாம் பிழை  என்று கூறும் மாற்று அணி தமிழ் அரசியலை பயன் பொருத்தமான விதத்தில் அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதாக இருந்தால் முதலில் மேற்கண்ட கேள்விக்கு விடை கண்டுபிடிக்க வேண்டும்.

இதை இன்னும் கூர்மையாக கூறின் நாடாளுமன்றத்துக்கு வெளியே தான் மாற்று அணி அதிகம் வேலை செய்ய வேண்டியிருக்கும். நாடாளுமன்றத்துக்கு வெளியே என்பது நடைமுறையில் மூன்று பரப்புகளைக் குறிக்கும். முதலாவது தாயகம். இங்கு வெகுசன மையப் போராட்டங்கள். இரண்டாவது தமிழகம். அங்கே இந்திய நடுவண் அரசின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கும் போராட்டங்கள்;நகர்வுகள். மூன்றாவது புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம். அங்கே ஐநாவை நோக்கியும் தலைநகரங்களை நோக்கியும் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒரு லொபி. இப்படியாக புது டில்லியை  நோக்கியும் ஏனைய தலைநகரங்களை நோக்கியும் ஒரு லொபியை முன்னெடுக்க வேண்டும்.

அதேசமயம் நடந்தது இனப்படுகொலையே என்பதை நிரூபிக்கத் தேவையான சான்றாதாரங்களை உலகம் ஏற்றுக்கொள்ளும் ஒரு முறைமைக் கூடாக முன்வைக்க வேண்டும். இதற்கு வேண்டிய ஒரு வழி வரைபடத்தை இரண்டு மாற்றுக் கட்சிகளும் இணைந்து உருவாக்க வேண்டும். இது மிகவும் முக்கியமான ஒரு முன்நிபந்தனை. இணைந்து உருவாக்க வேண்டும் என்பது. இதுவிடயத்தில் தனித் தனியாக நின்று தனி ஓட்டம் ஓடினால் கூட்டமைப்பு கடந்த 11 ஆண்டுகளாக தமிழ் மக்களை எங்கே கொண்டு வந்து நிறுத்தியதோ  அதே இடத்துக்கு தான் மாற்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளின் பின் தமிழ் மக்களை கொண்டு வந்து நிறுத்தும். எனவே ஐக்கியம் முக்கியம். இணைந்த செயற்பாடு முக்கியம். ஆகக்குறைந்தது ஏற்றுக்கொள்ளத்தக்க பொதுவிடங்களிலாவது ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

அதற்கு வேண்டிய விடயப் பரப்புக்களை அடையாளம் காண்பதற்குரிய  உரையாடல்களை இப்பொழுதே  ஆரம்பிக்க வேண்டும். ஏற்கனவே தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர் சிலர் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அறிய முடிகிறது. அதைத் தமிழ் மக்கள் பேரவையும் உட்பட ஏனைய சிவில் அமைப்புக்கள் ஒரு நிறுவனமயப்பட்ட செயற்பாடாக மாற்றி மாற்று அணியின்மீது தார்மீக அழுத்தத்தைப் பிரயோகிக்க  வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் தோற்காமல் இருப்பதென்றால் அதை இப்போதே உடனடியாகத்  தொடங்க வேண்டும்.

நிலாந்தன்

இதையும் படிங்க

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 7 | பத்மநாபன் மகாலிங்கம்

தம்பையர் திருமணம் செய்த போது வயது 19. விசாலாட்சிக்கு வயது 16. தம்பையர் இறந்த போது வயது 26. அப்போது விசாலாட்சிக்கு வயது 23. கணபதிப் பிள்ளைக்கு ஆறு வயது...

ஈழத் தமிழர்களின் பழங்கால குலதெய்வ வழிபாட்டின் தொல்லியல் ஆதாரங்கள்

இலங்கையின் வடக்கு பகுதியில் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வ வழிபாடாக மக்கள் கொண்டிருந்தமை தொடர்பிலான தொல்லியல் ஆதாரங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தமிழர்களுக்கு ஒரு வெளிவிவகாரக் கட்டமைப்புத் தேவை | நிலாந்தன்

கஜேந்திரகுமார் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது இந்திய இலங்கை உடன்படிக்கை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் 13ஆவது திருத்தத்தை ஒரு தொடக்கமாக கருதவில்லை என்று...

கடலின் அக்கரை போனோரே.. | முருகபூபதி

மூத்த எழுத்தாளர் முருகபூபதி நீண்ட நாட்களாக இலக்கியத் துறையில் ஒரு எழுத்தாளராகவும் இலக்கிய விமர்சகராகவும் ஓர் ஊடகவியலாளராகவும் பன்முக ஆற்றலுடன் இயங்கிக் கொண்டிருப்பவர். இவர் தனது படைப்புகளுக்காக பல விருதுகளும்...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 6 | பத்மநாபன் மகாலிங்கம்

தம்பையரின் இழப்பை விசாலாட்சியினால் தாங்க முடியவில்லை. அவள் பழையபடி இயங்க மிகவும் கஷ்டப்பட்டாள். கணபதியும் சோர்ந்து போய்க் காணப்பட்டான். தம்பையர் கணபதியின் எதிர்காலத்தைப் பற்றி...

மஞ்சள் – தேங்காய் – வைரஸ் – இருபதாவது திருத்தம் | நிலாந்தன்

நாடாளுமன்றத்தை ராஜபக்சக்கள் கைப்பற்றுவதற்கு முன்பு நாட்டில் கஞ்சா கடத்துவோரின் படங்கள் அவ்வப்போது ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால் இப்பொழுது மஞ்சள் கடத்தி அகப்படுவோரின் படங்கள்...

தொடர்புச் செய்திகள்

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.06 கோடியை கடந்தது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில்,...

கொழுப்பு, உடல் எடையை குறைக்கும் பூண்டு இஞ்சி தேநீர்

தேவையான பொருட்கள்: பூண்டு - 3-4 பல் தண்ணீர் -  ஒரு தம்ளர்இஞ்சி - ஒரு துண்டுதேன் - சுவைக்கு ஏற்பஎலுமிச்சை...

ஒரு மாதத்தில் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சிகள்

காலை இரண்டையும் அகட்டி வைத்துக்கொண்டு கைகள் இரண்டையின் முன் நீட்டி உட்கார்ந்து எழுவது ஸ்குவாட். இதைத்தான் நம் முன்னோர்கள் தோப்புக்கரணம் என்றனர். இது அடித் தொடை, முட்டி ஆகியவற்றை வலுப்படுத்தும்....

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இரண்டு முறை சுப்பர் ஓவரில் திகில் | மும்பையை பந்தாடியது பஞ்சாப் அணி!

இரசிகர்களுக்கு உச்சவிறுவிறுப்பை பரிசளித்த ஐ.பி.எல். ரி-20 தொடரின் 36ஆவது லீக் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றது.

ராஜஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை?

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 37ஆவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

படை பலத்தை அதிகரிக்கும் சீனா | தாய்வானுக்கு அச்சுறுத்தலா?

தாய்லாந்தை தனது பிராந்தியம் என சொந்த கொண்டாட முனையும் சீனா, தென்கிழக்கு கடற்கரையில் படை பலத்தை அதிகரித்து வருவதாக, சீன இராணுவ நடவடிக்கைகளை கண்காணித்து...

மேலும் பதிவுகள்

ரிஷாட் பதியூதீன் கைது | விரைந்த 6 பொலிஸ் குழுக்கள்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனை கைது செய்ய 6 பொலிஸ் (சீ.​ஐ.டி) குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் மற்றும்...

இளம் வயதில் சூர்யா – கார்த்தி எடுத்த புகைப்படம்!

நடிகர் சிவகுமாரின் மகன்கள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தவர்கள் சூர்யா-கார்த்தி. ஆனால் இவர்கள் தங்களுக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள பெரிய உழைப்பை போட்டுள்ளார்கள்.

இரண்டு முறை சுப்பர் ஓவரில் திகில் | மும்பையை பந்தாடியது பஞ்சாப் அணி!

இரசிகர்களுக்கு உச்சவிறுவிறுப்பை பரிசளித்த ஐ.பி.எல். ரி-20 தொடரின் 36ஆவது லீக் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றது.

மாகந்துரே மதூஸ் CCD யில்

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினராக கருதப்படும் மாகந்துரே மதூஸ் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றவியல் பிரிவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீண்டும் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்றாா் டிரம்ப்

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மீண்டும் பங்கேற்றாா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:...

உலகம் வழமைக்கு திரும்புமா? | ஆயிரம் அர்த்தங்கள் பேசும் புகைப்படம்!

கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் பொதுமக்களுக்கு நம்பிக்கை தரும் வகையிலான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பிந்திய செய்திகள்

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.06 கோடியை கடந்தது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில்,...

கொழுப்பு, உடல் எடையை குறைக்கும் பூண்டு இஞ்சி தேநீர்

தேவையான பொருட்கள்: பூண்டு - 3-4 பல் தண்ணீர் -  ஒரு தம்ளர்இஞ்சி - ஒரு துண்டுதேன் - சுவைக்கு ஏற்பஎலுமிச்சை...

ஒரு மாதத்தில் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சிகள்

காலை இரண்டையும் அகட்டி வைத்துக்கொண்டு கைகள் இரண்டையின் முன் நீட்டி உட்கார்ந்து எழுவது ஸ்குவாட். இதைத்தான் நம் முன்னோர்கள் தோப்புக்கரணம் என்றனர். இது அடித் தொடை, முட்டி ஆகியவற்றை வலுப்படுத்தும்....

செயற்கை நகைகள் பெண்களுக்கு ஏற்படுத்தும் ‘அலர்ஜி

அழகான, விதவிதமான டிசைன்களை கொண்ட நகைகளை அணிந்து அழகு பார்ப்பதற்கு பெண்கள் ஆசைப்படுவார்கள். எல்லாவிதமான நகைகளும் எல்லோருடைய சருமத்திற்கும் ஒத்துக்கொள்ளாது. குறிப்பாக செயற்கை நகைகள் பலருடைய சருமத்திற்கு பொருந்தாது.

நடிகர் சஞ்சய் தத் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்

பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து 61 வயதான அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். மருத்துவ சிகிச்சைக்காக...

அமெரிக்காவில் 84 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின்...

துயர் பகிர்வு