செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை அந்நியர்களின் வருகை! | பகுதி 3அந்நியர்களின் வருகை! | பகுதி 3

அந்நியர்களின் வருகை! | பகுதி 3அந்நியர்களின் வருகை! | பகுதி 3

2 minutes read

அவ்வுயிரினத்தின் இருதயத்தை உடற்கூற்றியலாளர்கள் பரிசோதிக்கும்போது அது பொருமளவில் உருக்குலைந்தே காணப்பட்டது எனக்குறிப்பிட்டுள்ளனர். இருதயம் சுற்றியோடும் பாயத்தை தற்காலிகமாக சேமித்து வைத்திருப்பதற்கேற்றவாறு அதிகளவு கொள்ளளவுடையதாக காணப்பட்டது.

மேலும் மனிதனது இருதயம் போன்று தடித்த இதயச் சுவர்களை அது கொண்டிருக்கவில்லை. இதற்குக் காரணம் குறைந்த ஈர்ப்புவிசைக்குட்பட்ட பகுதிகளில் வாழ்வதற்கான இசைவாக்கமாக அது இருந்திருக்கலாம். ஏனென்றால் ஈர்ப்புவிசைக்கெதிராக செயற்பட்டு குருதியை பாய்ச்சுவதற்கே மனிதனது இருதயம் போன்று தடித்த இதயச்சுவர்கள் தேவை.

கிட்டத்தட்ட நான்கு அடி உயரமேயுடைய அவ்வுயிரித்தின் நெஞ்சுக்கூட்டின்  பெரும்பகுதியை அதனது இரண்டு சுவாசப்பைகளுமே (lungs) நிரப்பியிருந்தன. அசாதாரணமாக பெரிதாக விருத்தியடைந்திருந்த அச்சுவாசப்பைகள் உண்மையில் உடலுக்கு தேவையான வளியை நீண்ட காலத்திற்கு சேமித்து வைத்து மெதுவாக சுற்றோட்டத்திற்குள் சேர்ப்பதற்காகவே ஆற்றலை கொண்டிருந்தன. இதன் மூலம் பறக்கும்தட்டில் நீண்டதூர பிரயாணங்களுக்காக பெருமளவு வளியை சேமித்து வைத்திருப்பதற்கான தேவை இருந்திருக்கவில்லை.

அவ்வுயிரினத்தின் எலும்புத் திசுக்களை (skeletal tissue) ஆராய்ந்தபோது அவை மனிதனது எலும்புகளை விட மென்மையானவையாகவும் நார்கள் (fibres) போன்று இலகுவில் வளையக்கூடியதாகவும் இருந்துள்ளது. இத்தன்மை அவ்வெலும்புகளுக்கு அதிர்ச்சி உறிஞ்சும் ஆற்றலை அளித்து பறக்கும் தட்டு சடுதியாக ஆர்முடுகும்போதும் அமர்முடுகும்போதும் மற்றும் நீண்டதூரபயணங்களின்போது அவ்வுயிரினங்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பாரிய அதிர்வு விசைகளில் இருந்தும் எலும்புகளை நொருங்கி சிதையவிடாமல் பாதுகாத்திருக்கலாம்.

இவ்வாறு மிகச்சிறப்பாக நீண்ட தூரப்பயணங்களுக்கான உடற்கூற்று இசைவாக்கங்களை கொண்டிருந்த இவ்வுயிரினங்கள் உண்மையிலேயே வேற்றுகிரகவாசிகளா அல்லது வேற்றுக்கிரகவாசிகளால் உயிர்ப் பொறியியல் (bioengineered) முறை மூலம் நீண்டதூரப் பிரயாணங்களுக்கு ஏற்றவகையில் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட உயிரினங்களா என்ற சந்தேகமும் மருத்துவர்களுக்கு ஏற்பட்டது.

இவ்வுயிரினத்தின் வயிற்றுப் பகுதியினை ஆராய்ந்தபோது அதனுள் மனிதர்களில் காணப்படுவது போன்று குடலமைப்புகளைக் கொண்ட சமிபாட்டுத்தொகுதியோ சிறுநீரகங்களையொத்த கழிவகற்றும் தொகுதியோ காணப்படவில்லை. இவ்விடயம் மருத்துவர்களுக்கு அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. ஏனென்றால் இவ்வுயிரினங்கள் எம்முறைமூலம் சக்தியைப் பெறுகின்றன? எவ்வாறு தமது கழிவுகளை அகற்றுகின்றன? அவை எத்தகைய இரசாயன மூலக்கூறுகளால் ஆக்கப்பட்டுள்ளன? எவ்வாறு நீண்ட தூரப் பிரயாணங்களின்போது தம்மை தக்கவைத்துக் கொள்கின்றன?  என்பன தொடர்பாக ஒரு தீர்மானத்திற்கு அவர்களால் வரமுடியவில்லை. அது தொடர்பாக பல அனுமானங்களையும் முன்வைத்தார்கள்.

அவர்களது அனுமானங்களின்படி அவ்வுயிரினத்தின் சுற்றோட்டத்தொகுதியில் காணப்படும் நிணநீர் போன்ற பாயமே அதனது உடற்தொழிற்பாடுகளுக்கான ஊட்டச்சத்துக்களை விநியோகிப்பதுடன் உடலில் உருவாகும் கழிவுகளை அகற்றுவதற்கான ஒரு ஊடகமாக (மனிதனின் குருதியைப் போன்று) தொழிற்படவேண்டுமெனவும் உடற்கழிவுகள் அவ்வுயிரினத்திற்கு வெளியே தோல் போன்று காணப்பட்ட மெல்லிய அமைப்பினூடாகவே வெளியெற்றப்படவேண்டும் எனவும் கூறியிருந்தார்கள்.

இவ்வுயிரினத்தின் உட்தோற்பகுதி மருத்துவர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்திருந்தது. ஒரு மெல்லிய ஊடுபுகவிடக்கூடிய கொழுப்புப்படை (fatty layer) போன்று காணப்பட்ட உட்தோல் நிணநீர் போன்ற பாயத்துடன் தொடர்ச்சியாக பதார்த்தங்களை பரிமாற்றம் செய்யக்கூடிய விதத்தில் தொடர்பில் காணப்பட்டது.

இத்தோற்பகுதியே கழிவுகளை பாயத்திலிருந்து வெளியேற்றியும் அக்கழிவுகளை மீண்டும் பாவிக்கக்கூடிய வகையில் மீழ்சுழற்சிக்கு உட்படுத்தியும் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் ஒரு எடுகோளை முன்வைத்தார்கள். அதற்கேற்றால்போல் பறக்கும் தட்டினுள்ளும் எந்தவித உணவு சேமிப்புகளுமோ கழிவகற்றும் வசதிகளுமோ காணப்படவில்லை.

 

 

தொடரும்…

 

 

நன்றி : பதிவுகள் இணையம் |  பொ.மனோ

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.