செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா ‘தி எலிபேண்ட் விஸ்பரர்ஸ்’ தம்பதிக்கு முதலமைச்சருடன் கௌரவம்

‘தி எலிபேண்ட் விஸ்பரர்ஸ்’ தம்பதிக்கு முதலமைச்சருடன் கௌரவம்

0 minutes read

“தி எலிபேண்ட் விஸ்பரர்ஸ்” என்ற இந்திய ஆவணப் படம் சிறந்த ஆவணப் படத்துக்கான ஒஸ்கார் விருதை பெற்றிருந்தது.

இதில் இடம்பெற்ற பொம்மன் – பெல்லி தம்பதியை, சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொம்மன் – பெல்லி தம்பதி, தாயை பிரிந்த குட்டி யானைகளை தங்களது குடும்பத்தில் ஒருவர் போல நினைத்து வளர்த்ததாகவும், குறும்படம் ஒஸ்கார் வென்றது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தனர்.

ரகு குட்டி யானையை பிரிந்தது வருத்தம் அளித்தாலும் புதிதாக வரும் குட்டி யானைகளை வளர்க்கும் பணியை தொடர்ந்து செய்வோம் என்றும் அவர்கள் கூறினர்.

தொடர்புடைய செய்தி – ஆஸ்கர் வென்ற கீரவாணி, கார்த்திகிக்கு ரஜினி வாழ்த்து

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.