ஸ்கொட்லாந்தின் புதிய தலைமை அமைச்சரின் வீட்டிற்கு அருகில் யாரோ ஒருவர் “சந்தேகத்திற்கிடமான வகையில்” நடந்து கொண்டதாக வெளியான தகவலை அடுத்து 28 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எடின்பரோவில் உள்ள சார்லோட் சதுக்கத்தில் சனிக்கிழமை இரவு குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இந்த சம்பவத்தால் “பொதுமக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை” என்று அவர்கள் கூறினர்.
இந்த சம்பவம் குறித்து ஸ்கொட்லாந்து அரசாங்கம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.