செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா வெள்ளை மாளிகையில் சுந்தர் பிச்சை

வெள்ளை மாளிகையில் சுந்தர் பிச்சை

0 minutes read

அண்மைக்காலமாக செயற்கை நுண்ணறிவு மூலமாக அழிவுசக்திகள் தலைதூக்கியிருக்கும் நிலையில், அவற்றை ஒழுங்குமுறைப்படுத்தவும் அரசு அதிகாரத்தில் கட்டுப்படுத்தவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் தொழில்நுட்பத் துறை வல்லுனர்களை, வெள்ளை மாளிகைக்கு அழைத்து, துணை அதிபர் கமலா ஹாரிஸ் தலைமையில் அவசர ஆலோசனை நடத்தியது.

குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சத்யா நாதெல்லா மற்றும் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட தொழில்நுட்பத் துறையினர் நேற்று வெள்ளை மாளிகைக்குச் சென்றனர்.

எந்தவொரு புதிய செயற்கை நுண்ணறி செயலியை வெளியிடும் முன்பாக அதன் பாதுகாப்பு அம்சத்தை உறுதி செய்ய வேண்டும் என்று அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

நம்பகத்தன்மை மிக்க செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டுக்காக அமெரிக்கா 140 மில்லியன் டாலர் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.

இத்தொகை, மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் செய்த முதலீட்டை ஒப்பிட்டால் மிகவும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.