செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா புலம்பெயர் தொழிலாளர்கள் பயணித்த பஸ் கடத்தல்

புலம்பெயர் தொழிலாளர்கள் பயணித்த பஸ் கடத்தல்

0 minutes read

அமெரிக்காவில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்த குடியேற்ற கொள்கைகள் சமீபத்தில் காலாவதியானது.

இதனால் அமெரிக்காவில் நுழையும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்து வருகிறது.

எனினும், அதனை பொருட்படுத்தாமல் மெக்சிகோ வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சட்டவிரோதமாக நுழைகின்றனர்.

இந்நிலையில், மெக்சிகோவின் சியாபாஸ் மாகாணத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு, அமெரிக்காவுக்கு பயணித்த பஸ், அமெரிக்காவின் மிசூரி மாகாணம் – மேட்ஹுவாலா பகுதியில் வைத்து மர்ம கும்பலால் கடத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பஸ்ஸில் இருந்த ஒவ்வொருவருக்கும் தலா 82,000 டெலர் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அமெரிக்காவில் உள்ள மெக்சிகன் தேசிய கூட்டமைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, காணாமல் போனவர்களை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டனர். இதில் 9 பேர் இதுவரை மீட்கப்பட்டு உள்ளதாகவும், மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.