June 7, 2023 5:46 am

கொடிய தொற்றுநோயை எதிர்க்க தயாராக வேண்டும்: உலக சுகாதார ஸ்தாபனம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
கொடிய தொற்றுநோயை எதிர்க்க தயாராக வேண்டும்: உலக சுகாதார ஸ்தாபனம்

கொரோனாவை விட கொடிய தொற்றுநோய் உருவாகக்கூடுமென உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2019ஆம் ஆண்டு உருவான கொரோனா தொற்றுநோய் உலகில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், தடுப்பூசி மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றால், தற்போது உலகம் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனை தொடர்ந்து கொரோனா பெருந்தொற்றை உலக சுகாதார அவசரநிலையில் இருந்து நீக்குவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனாவை விட கொடிய தொற்றுநோய் விரைவில் உருவாகும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டிட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார மாநாட்டில் பேசிய அவர், “கொரோனா பெருந்தொற்று உலக சுகாதார அவசர நிலையில் இருந்துதான் நீக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இன்னமும் மனித குலத்துக்கான அச்சுறுத்தல் என்ற நிலையில் இருந்து அது நீக்கப்படவில்லை” என்றார்.

மேலும், கொரோனாவை விட கொடிய தொற்றுநோய் விரைவில் உருவாகக்கூடும் என்று கூறிய அவர், அதனை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்