June 7, 2023 7:10 am

அதிவேகப் படகில் கடத்திச் செல்லப்பட்ட கொகைன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

21 மில்லியன் டொலர் மதிப்புள்ள கொகைன் போதைப்பொருள் கொலம்பியா அருகே அதிவேகப் படகில் கடத்திச் செல்லப்பட்ட  பறிமுதல் செய்யப்பட்டது.

கரீபியன் கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து கொலம்பிய ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ரோந்துப் பணியில் ஈடுபட்டது. அப்போது டொமினிகன் குடியரசை நோக்கி அதிவேகமாகச் சென்ற படகை ஹெலிகாப்டர் விரட்டிச் சென்று இடை மறித்தது.

இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட படகை பின்தொடர்ந்து வந்த கொலம்பிய கடற்படை வீரர்களும் அந்தப் படகை சுற்றி வளைத்தனர்.

படகினை சோதனை செய்தபோது அதில், மறைத்து வைக்கப்பட்டிருந்த 628 கிலோ கொக்கைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு 21 மில்லியன் டொலர் என கொலம்பிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்