September 22, 2023 2:19 am

சனி கோளின் நிலவில் நீர் – புதிய கண்டுபிடிப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
சனி கோளின் நிலவில் நீர் - புதிய கண்டுபிடிப்பு

பூமியைத் தவிர மற்றொரு கோளின் நிலவு ஒன்றில் நீர் இருப்பதை ஜேப்ஸ் வெப் தொலைநோக்கி உறுதிப்படுத்தி உள்ளது.

சனிக் கோளின் துணை கோளான அதாவது அதன் நிலவு ஒன்றில் நீர் இருப்பதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்து அனுப்பியுள்ளது.

நாசா விஞ்ஞானிகள் வெளியிட்ட அறிவிப்பில், “நமது சூரிய குடும்பத்தில் உள்ள சனிக் கோளில் அதன் நிலவுகளில் ஒன்றான என்செலடஸில் (பனிக்கட்டியிலான நிலவு) 9,600 கிலோ மீட்டர் நீளத்திற்கு நீரூற்று காணப்படுவதை ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி கண்டறிந்துள்ளது. இந்த நீரூற்றின் அளவை வைத்து பார்க்கும்போது ஜப்பானிலிருந்து இங்கிலாந்துக்கு செல்லும் தூரத்தை இந்த நீர் ஊற்று கொண்டிருக்கிறது. மேலும் இதில் காணப்படும் கடல் பகுதிகளில் நீர் உப்புத் தன்மையை கொண்டிருப்பதால் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளும் உருவாகலாம்” என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து விஞ்ஞானிகள் கூறும்போது, “என்செலடஸின் மேற்பரப்பில் வெப்பநிலை மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். அதே நேரத்தில் நிலவின் மையப்பகுதியில், இந்த தண்ணீரை சூடாக்கும் அளவுக்கு வெப்பம் இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

நாசாவின் மைல்கல்லாக பார்க்கப்படும் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று விண்ணில் ஏவப்பட்டது.

பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் ஜேம்ஸ் வெப் நிலைநிறுத்தப்பட்டதுடன், ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலை நோக்கி விண்வெளியில் பதிவு செய்த முதல் புகைப்படத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்டார்.

1960களில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் நாசா முனைப்புடன் இருந்தபோது, அதன் நிர்வாகியாக இருந்த ஜேம்ஸ் வெப்பின் பெயர்தான் இத்தொலைநோக்கிக்கு சூட்டப்பட்டுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்