September 22, 2023 5:18 am

அமெரிக்கா – இங்கிலாந்தின் அட்லாண்டிக் பிரகடனம் வெளியீடு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
அமெரிக்கா - இங்கிலாந்தின் அட்லாண்டிக் பிரகடனம் வெளியீடு

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திற்கு இடையிலான பொருளாதார கூட்டணிக்கான அட்லாண்டிக் பிரகடனம் வெளியீடப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்குச் சென்றுள்ள இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோர் இணைந்து, வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர்கள் மாநாட்டில் இந்தப் பிரகடனத்தை வெளியிட்டுள்ளனர்.

இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் இணைந்து செயல்படும் வகையில் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான புதிய புரிந்துணர்வுத் திட்டமாக இது அமையவுள்ளது.

இந்தப் புதிய கூட்டணித் திட்டத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பான விநியோக தொடரை உருவாக்குதல், தந்திரோபாய சார்புகளை குறைத்தல் மற்றும் நாட்டின் எதிர்ப்பு பலத்தை உருவாக்குதல் போன்றவை மேம்படுத்தப்படும்.

மேலும், வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு கருவிகளில் தொடர்பான நெருக்கமான உறவையும் இது உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்