September 22, 2023 6:10 am

ட்ரம்ப் மீது குற்றப்பத்திரம் தாக்கல்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
ட்ரம்ப் மீது குற்றப்பத்திரம் தாக்கல்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் போது, இரகசிய ஆவணங்களை தவறாக கையாண்டதாக அவர் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மியாமியில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (13) ஆஜராகுமாறு தனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

‘அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று நான் நினைக்கவே இல்லை’ என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் மாதம், ஆபாச பட நடிகைக்கு இலஞ்சம் கொடுத்த வழக்கில் குற்றப்பத்திரம் வழங்கப்பட்டதை தொடர்ந்து, ட்ரம்ப் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட முதல் அமெரிக்க ஜனாதிபதியானார்.

புதிய குற்றப்பத்திரத்தை தொடரந்து, நேற்று (08) ட்ரம்ப் வெளியிடப்பட்ட வீடியோவில், ‘நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நான் ஒரு அப்பாவி மனிதன்’ எனத் தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்