செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் இனவெறி தாக்குதலை கண்டித்து கால்பந்து போட்டி புறக்கணிப்பு

இனவெறி தாக்குதலை கண்டித்து கால்பந்து போட்டி புறக்கணிப்பு

0 minutes read

இனவெறி தாக்குதலுக்கு நியூசிலாந்து வீரர் உள்ளானதை கண்டித்து  அணியின் சக வீரர்கள் கத்தாருக்கு எதிரான கால்பந்து போட்டியை பாதியில் புறக்கணித்தனர்.

நியூஸிலாந்து மற்றும் கத்தார் அணிகள் இடையிலான நட்பு ரீதியான கால்பந்து போட்டி ஆஸ்திரியாவில் நடைபெற்றது. அதில் சமோவா பழங்குடி இனத்தைச் சேர்ந்த நியூசிலாந்து வீரர் மைக்கேல் போக்சாலை, கத்தார் வீரர் ஒருவர் இனரீதியாக விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

நடுவரிடம் புகாரளித்தும் அவர் நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இரண்டாம் பாதி ஆட்டத்தை நியூசிலாந்து வீரர்கள் புறக்கணித்தனர். இந்தப் போட்டியில் நியூஸிலாந்து 1-க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.