0
உலக நாடுகள் பல கொரோனா தொற்று காரணமாக விமான சேவைகளை குறைத்து விட்டன.
தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில், நிறுத்தப்பட்ட விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து விமான நிலையத்தில் இருந்து சீனாவின் ஷென்சென் விமான நிலையத்துக்கு இயக்கப்பட்ட நேரடி விமானங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தற்போது, இந்த விமான சேவை ஹைனன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மூலம் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.