December 2, 2023 10:23 am

18 ஆண்டுகளுக்கு பின் மனைவியை விவாகரத்து செய்யும் கனடா பிரதமர்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
மனைவியை விவாகரத்து செய்யும் கனடா பிரதமர்

கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோவும் (Justin Trudeau) அவரது மனைவி சோஃபியும் (Sophie) திருமணமாகி, 18 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிய முடிவு செய்திருப்பதாக நேற்று (02) தனது Instagramஇல் பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் ரூடோவும் அவரது மனைவி சோஃபியும் திருமண வாழ்க்கையில் சந்தித்த இன்னல்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசியிருந்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக இருவரையும் ஒன்றாக வெளியிடங்களில் பார்ப்பது அரிதாகவே காணப்பட்டது.

2005ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்ட ஜஸ்ட்டின் ட்ரூடோவுக்கும் சோஃபிக்கும் 3 பிள்ளைகள் உள்ளனர்.

2020ஆம் ஆண்டில் திருமண நிறைவு விழாவின்போது, மனைவியைத் தமது ஆகச் சிறந்த நண்பர் என்று வருணித்திருந்தார் ஜஸ்ட்டின் ட்ரூடோ.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்