புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் 6 வயது சிறுவன் மரணம்; கொலை வழக்கில் பெண் கைது!

6 வயது சிறுவன் மரணம்; கொலை வழக்கில் பெண் கைது!

1 minutes read

இங்கிலாந்து, சவுத் வேல்ஸ் ( South Wales) – Swansea பகுதியில் 6 வயதுச் சிறுவன் மரணித்ததையடுத்து, கொலைக் குற்றச்சாட்டில் 41 வயது பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை (29) இரவு 8.30 மணியளவில் சம்பவ இடத்துக்கு பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள பெண், பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று, சவுத் வேல்ஸ் தெரிவித்துள்ளனர்.

“இது ஒரு துயரமான சம்பவம். இது உள்ளூர் சமூகத்திற்கு அதிர்ச்சியாக இருக்கும். குழந்தையின் மரணத்தின் சூழ்நிலையை நிறுவ துப்பறியும் நபர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், உள்ளூர்வாசிகளுக்கு பாதுகாப்பளிக்கும் வகையில் அப்பகுதியில் அதிக பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என சவுத் வேல்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுவனின் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், அது தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்படுவதாகவும் சவுத் வேல்ஸ் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற வீட்டில் சிறுவனும் பெண்ணும் ஒன்றாக வசித்துள்ளனர் எனவும், இந்த மரணம் தொடர்பாக வேறு யாரையும் பொலிஸார் தேடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அயல் வீட்டாரிடம் தகவல் சேகரிப்பது மற்றும் அப்பகுதி சிசிடிவி வீடியோக்களை பெறுவதிலும் பொலிஸார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More