செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் உளவு பார்ப்பதாக ‘பிரிட்டிஷ் கவுன்சில்’க்கு ரஷ்யாவில் தடை!

உளவு பார்ப்பதாக ‘பிரிட்டிஷ் கவுன்சில்’க்கு ரஷ்யாவில் தடை!

1 minutes read

நேற்றில் இருந்து (ஜூன் 5) அமலாகும் வகையில், ‘பிரிட்டிஷ் கவுன்சில்’ ஸ்தாபனத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ரஷ்யாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் மதிப்பை குறைக்கும் நடவடிக்கைகளை ‘பிரிட்டிஷ் கவுன்சில்’ மறைமுகமாக செய்வதாக இங்கிலாந்து உளவு அமைப்பு மீது ரஷ்யாவின் பெடரல் பாதுகாப்பு சேவை குற்றஞ்சாட்டியுள்ளது.

அதாவது, ரஷ்யாவின் அடையாளத்தை அழிக்கவும், செல்வாக்கு மிக்க முகவர்களின் உலகளாவிய இணைப்பை உருவாக்கவும் இங்கிலாந்து முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

இவ்வாறான உளவு விடயங்களுக்கு ரஷ்யாவின் 4 பிராந்தியங்களில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்களும் ஒத்துழைத்து வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்யாவின் பெடரல் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து ‘பிரிட்டிஷ் கவுன்சில்’ ஸ்தாபனத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் 15 ரஷ்ய பிரஜைகளுக்கு உத்தியோகப்பூர்வமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், பிரிட்டிஷ் கவுன்சிலைத் தடை செய்யுமாறு கேட்டுக்கொண்டதுடன், ரஷ்ய பிரஜைகள் அதனுடன் எந்தத் தொடர்பும் கொள்ள வேண்டாம் என்றும் எச்சரித்ததாகவும் ரஷ்யாவின் பெடரல் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, மேற்படி குற்றச்சாட்டுகளை மறுத்தள்ள ‘பிரிட்டிஷ் கவுன்சில்’, தங்களது செயற்பாடுகளை நிறுத்த ரஷ்ய நிர்வாகத்தால் 2018ஆம் ஆண்டும் தாம் வற்புறுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More