செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அமெரிக்கா – இந்தியா அரச உறவில் விரிசல்!

அமெரிக்கா – இந்தியா அரச உறவில் விரிசல்!

0 minutes read

அமெரிக்கா மற்றும் இந்திய அரச உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதற்காக இந்தியப் பொருள்கள் மீதான வரிகளை அதிகரிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் மீண்டும் மிரட்டியுள்ளார்.

அடுத்த 24 மணி நேரத்திற்குள் வரிகள் கணிசமாக உயர்த்தப்படும் என்று அவர் எச்சரித்தார்.

CNBC தொலைக்காட்சிப் பேட்டியில் டிரம்ப் இதனைத் தெரிவித்தார்.

இந்தியா நல்ல வர்த்தகப் பங்காளியாகத் திகழவில்லை, உக்ரேன் போரை அது தூண்டிவிடுவதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்கப் பொருள்களுக்கு இந்தியா வரி விலக்கு அளிக்க முன்வந்துள்ளது. ஆனால், அது ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதால் அதன் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் டிரம்ப் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, டிரம்ப்பின் இந்தக் கருத்துகளுக்கு இந்தியா பதில் எதுவும் அளிக்கவில்லை. இந்தியா நியாயமற்ற முறையில் குறி வைக்கப்படுவதாக அதன் வெளியுறவு அமைச்சு ஏற்கெனவே கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.