இங்கிலாந்திற்கு வரும் சில புலம்பெயர்ந்தோர் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்படவுள்ள கடுமையான புதிய விதிகளின் கீழ், A-நிலை தரத்திற்கு ஆங்கிலம் பேச கட்டாயமாக்கப்படலுள்ளது.
அதாவது கட்டாயம் Secure English Language Test (SELT) என்னும் தேர்வை எழுதி வெற்றி பெறவேண்டும்.
இந்த மாற்றங்கள், எதிர்வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
சில பட்டதாரிகள் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் வணிகங்களால் பணியமர்த்தப்பட்டவர்களுக்கான திறமையான பணியாளர் அல்லது ஸ்கேல்-அப் விசாக்களுக்கு விண்ணப்பிப்பவர்களையும் இந்த நிபந்தணை உள்ளடக்கியுள்ளது.
இப்புதிய விதிகள், கடந்த மே மாதம் ஓர் அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்ட இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தோரின் அளவைக் குறைப்பதற்கான பரந்த திட்டங்களின் ஒரு பகுதியாகும்.
“நீங்கள் இந்த நாட்டிற்கு வந்தால், நீங்கள் எங்கள் மொழியைக் கற்றுக்கொண்டு உங்கள் பங்கை வகிக்க வேண்டும்” என்று உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் கூறினார்.