சிங்கப்பூரும் கனடாவும் ஒத்துழைப்பை வலுப்படுத்தத் திட்டமிடுகின்றன.
இரு நாடுகளும் இந்த ஆண்டு 60ஆவது ஆண்டு அரசதந்திர உறவை அனுசரிக்கின்றன.
இந்நிலையில், கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த், இரு நாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ளார்.
அவர் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனை இதன்போது சந்தித்தார்.
ஒத்துழைப்பை ஆழப்படுத்த இருதரப்பும் கடப்பாடு தெரிவித்ததாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
வட்டார மற்றும் உலக நடப்புகள் குறித்தும் இரு நாட்டு அமைச்சர்களும் கலந்துரையாடினர்.
மேலும், துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங்கையும் கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் இதன்போது சந்தித்தார்.
இரு நாடுகளும் வர்த்தகத்தில் கூடுதலாக ஒத்துழைப்பது பற்றி இருவரும் கலந்துரையாடினர்.