செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் இஸ்ரேல் மீது ஹமாஸின் தாக்குதலை பாராட்டிய ஈரான் மாணவியை நாடு கடத்த பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவு

இஸ்ரேல் மீது ஹமாஸின் தாக்குதலை பாராட்டிய ஈரான் மாணவியை நாடு கடத்த பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவு

0 minutes read

சமூக ஊடகங்களில் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் வகையில் கருத்துகள் பதிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஈரானிய பிரஜையான மாணவியை குற்றவாளி என அறிவித்து, பிரான்ஸ் நாட்டின் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதன்படி, லியோன் நகரில் வசித்து வந்த மாணவி மஹ்தியே எஸ்ஃபாண்டியாரி (Mahdieh Esfandiari) என்பவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தண்டனை காலம் நிறைவடைந்ததும் அவரை பிரான்ஸிலிருந்து நாடு கடத்த உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பை கடுமையாக விமர்சித்த மஹ்தியே சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

குறித்த மாணவி 2023ஆம் ஆண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலைப் பாராட்டும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டிருந்தார். அதனை அடிப்படையாகக் கொண்டு, அவர் மீது பயங்கரவாதத்தை ஆதரித்ததாக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.