செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் BBCயில் பெரும் ஆட்குறைப்பு? 2,000 பணியாளர்களை நீக்க திட்டம்!

BBCயில் பெரும் ஆட்குறைப்பு? 2,000 பணியாளர்களை நீக்க திட்டம்!

1 minutes read

BBC செய்தி நிறுவனம் விரைவில் பெரிய அளவிலான ஆட்குறைப்பை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கையின் கீழ், சுமார் 1,800 முதல் 2,000 பணியாளர்கள் வரை வேலை இழக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் தற்காலிக நிர்வாக இயக்குநராக இருக்கும் ரோட்ரி டல்ஃபான் டேவிஸ் (Rhodri Talfan Davies) இதுகுறித்து கருத்துத் தெரிவிக்கையில், இறுதி முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்றாலும், பணியாளர் எண்ணிக்கையை குறைக்கும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாகக் கூறினார்.

தற்போது BBCயில் சுமார் 21,500 பேர் பணியாற்றி வருகிறார்கள். இதில் 10 பேரில் ஒருவர் வரை வேலையை இழக்கும் அபாயம் இருப்பதாக நிறுவனத்திலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், BBC கடுமையான நிதி சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும், செலவுகள் மற்றும் வருமானம் இடையிலான வித்தியாசம் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையை சமாளிக்க அடுத்த இரண்டு ஆண்டுகளில் 500 மில்லியன் பவுண்டு செலவைக் குறைக்கும் இலக்கை நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

தற்போது BBC நிறுவனத்தின் ஆண்டு செயல்பாட்டு, செலவு சுமார் 5 பில்லியன் பவுண்டாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.