March 26, 2023 11:42 pm

இனிமேல் இந்த உலகில் போர் உருவாகாது- வட கொரிய அதிபர் கிம் ஜாங்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இனிமேல் இந்த உலகில் போர் உருவாகாது… கையில் அணுகுண்டுகளை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இப்படி கூறியிருப்பதுதான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1950 -ம் ஆண்டு ஜூன் 25- ந் தேதி வடகொரியா தென்கொரியா மீது தாக்குதலை தொடுத்தது. 1953- ம் ஆண்டு ஜூலை 27- ந் தேதி இந்த போர் முடிவுக்கு வந்தது. வடகொரியாவுக்கு சோவியத் யூனியனும் தென்கொரியாவுக்கு அமெரிக்காவும் ஆதரவளித்தன. ஆனாலும், போரில் எந்த நாடும் வெற்றி பெறவில்லை.

கொரியப் போர் முடிவுக்கு வந்து நேற்றுடன் 67 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி இந்த போரில் பங்கேற்ற வட கொரிய முன்னாள் ராணுவ வீரர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி தலைநகர் பியாங்கியாங்கில் இன்று நடைபெற்றது. வடகொரியாவின் முன்னாள் ராணுவ வீரர்கள் இந்த விழாவில் பூரண ராணுவ உடை தரித்து பங்கேற்றனர்.

விழாவில் பங்கேற்ற வடகொரிய அதிபர் கிங் ஜாம் உன், வயதான மூத்த ராணுவ தளபதியை கௌரவிக்கும் வகையில் மேடைக்கு அழைத்து வந்து தன் அருகில் அமர வைத்தார். அப்போது , அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது.

பின்னர், நிகழ்ச்சியில் பேசிய கிம் ஜாங் உன், ‘இனிமேல் உலகத்தில் போர் ஏற்படாது என்று பேசியது சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும், வடகொரியா எதிரி நாடுகளிடத்திலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே அணுஆயுதங்களை தற்கோப்பு நோக்கத்துடன் தயாரித்திருப்பதாகவும் வட கொரிய அதிபர் தன் பேச்சில் குறிப்பிட்டார்.

முன்னதாக, கொரிய போர் முடிவைடைந்ததையடுத்து நேற்று தலைநகர் பியாங்கியாங்கில் நிகழ்ந்த வான வேடிக்கையை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.

அணுகுண்டை விளையாட்டு பொருள் போல கருதும் வட கொரிய அதிபர் கிம் ஜான் உன், இனிமேல் போர் நிகழாது என்று பேசியுள்ளதால் உலக நாடுகள் சற்று நிம்மதியடைந்துள்ளன.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்