செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஐரோப்பா மீண்டும் வடகொரியா ஏவுகணை தயாரிப்பில்!

மீண்டும் வடகொரியா ஏவுகணை தயாரிப்பில்!

0 minutes read

 

அமெரிக்கவுடன் பேச்சிவார்த்தையின் பின்னர் நிறுத்திவைக்கப்பட்ட இடத்தில் மீண்டும் வடகொரியா ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக வாசிங்டன் போஸ்ட்டிற்கு அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகரிற்கு அருகில் உள்ள பகுதியில் இரு கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணைகளை தயாரிக்கும் நடவடிக்கையில் வடகொரியா ஈடுபட்டுள்ளது என வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை இலக்கு வைக்கும் விதத்தில் வடகொரியா தயாரித்த முதல் ஏவுகணை குறிப்பிட்ட பகுதியிலேயே தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வடகொரியா புதிய ஏவுகணைகளை தயாரிக்கும் நடவடிக்கைகளில் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது என்பதை உறுதி செய்ய முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட பகுதியில் வாகனங்கள் நடமாடுவதை காண்பிக்கும் செய்மதி புகைப்படங்களை ரொய்ட்டர் செய்தி சேவை வெளியிட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.