இந்திய வெளிவிவகாரதுறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு மொங்கோலியா சென்றுள்ளார். மொங்கோலியா நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இன்று சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில், இரு நாட்டு வெளிவிவகாரத்துறை அமைச்சர்களுக்கிடையிலும் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, ஒப்பந்தங்களும் கைச்சாத்தாகியுள்ளன. அத்துடன் அவர்களுக்கிடையிலான கலந்துரையாடலின் போது, தீவிரவாதம் மற்றும் அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
