இந்தியாவின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ளது தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் குண்டு வெடிக்கும் என சென்னை பொலிஸ் கட்டுப்பாட்டு தகவல் மையத்துக்கு கிடைத்த தகவலையடுத்து பரபரப்பு ஏற்பட்டது
இதையடுத்து, முதல்வர் வீட்டுக்கு குண்டு செயலிழக்கும் நிபுணர்களும், மோப்ப நாயும் மூலமும் தீவிர சோதனை நடத்தினர். இறுதியில் அது புரளி என தெரிய வந்தது.
மிரட்டல் விடுத்த நபர் குறித்து பொலிஸ் தொடர்ந்து விசாரணை மேட்கொண்டு வருகிறார்கள்.
