
23வது கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக எடியூரப்பா இன்று பதவியேற்றார். அவர் ஆளுநர் வாஜுபாய் வாலா முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 இடங்களில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சிக்கு ஆட்சியமைக்க அனுமதி வழங்குமாறு, மாநில ஆளுநரிடம் எடியூரப்பா கோரியிருந்தார்.
இதனை எதிர்த்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஹூல் காந்தி நேற்று உயர் நீதிமன்றில் மனுதாக்கல் செய்திருந்தார். குறித்த மனு நேற்று இரவே விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வேளை, ஆளுநரின் முடிவில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதிகள் அறிவித்ததுடன், ஆளுநரின் செயற்பாடுகள் நீதிமன்றின் கண்காணிப்பின் கீழேயே இருக்கும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.