முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர், ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஈழத் தமிழர்களை இந்தியா தான் காப்பாற்றியிருக்க வேண்டும்.
ஈழத் தமிழர் விடயத்தில் நடவடிக்கைகளை முன்னெடுக்க இந்திய மத்திய அரசுக்கு அழுத்தத்தை கொடுப்பதற்கான முன்னெடுப்புகளை தமிழகம் தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனினும், அந்தக் கடமையை செய்யத் தவறிவிட்ட நிலையில், குறைந்தபட்சம் பொறுப்புக்கூறலுக்கான நடவடிக்கைகளையாவது இந்தியா மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அத்தகைய முயற்சிகள் எதையுமே இந்தியா மேற்கொள்ளவில்லை என ராமதாஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
