செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா மருத்துவமனை அருகே துப்பாக்கி சூடு!

மருத்துவமனை அருகே துப்பாக்கி சூடு!

0 minutes read


தூத்துக்குடியில்உள்ள ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக மூடக்கோரி நேற்று அமைதியான முறையில்போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது தமிழக காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியது.இந்த சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 65க்கும்மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தனர். அதில்,ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக மூட வேண்டும் மற்றும் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட காவலர்கள்மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என கூறினர். இதனால் காவலர்களுக்கும், பொதுமக்களுக்கும்இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து காவலர்கள் மீண்டும் எச்சரிக்கும் விதமாக துப்பாக்கிசூடு நடத்தி வருகின்றனர். மேலும் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி வருகின்றனர். இதனால் தூத்துக்குடியில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.