செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கைது!

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கைது!

1 minutes read

 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று சபாநாயகர் தலைமையிலான பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தை திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் புறக்கணித்தனர்.

மேலும், முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உட்பட திமுக எம்.எல்.ஏக்கள் பலர் சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து முதல்வர் தரப்பிலிருந்து அனுமதி ஏதும் அளிக்கப்படாத நிலையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் அறை முன்பு அமர்ந்து திமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு காவல்துறையே காராணம் என திமுக எம்.எல்.ஏ.க்கள் முழக்கமிட்டபடி தர்ணா செய்தனர்.

இதேபோல, தலைமை செயலகத்திற்கு வெளியே திமுகவினர் சாலையை மறித்து அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

இதனை அடுத்து, ஸ்டாலினை தூக்கிக்கொண்டு தலைமை செயலகத்தில் இருந்து பொலிஸார் வெளியே தூக்கி வந்தனர். பின்னர், வெளியே வந்த ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் சாலையில் அமர்ந்து மறியல் நடத்தினர்.

சிறிது நேரத்திற்கு பின்னர், பொலிஸார் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களை  செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.