
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 100 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100 வது நாளான மே 22-ம் தேதி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய பொலிஸார்
போராட்டக்காரர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்த உறவினர்கள் மீதும் பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.
இது இவ்வாறு இருக்க ரஜினிகாந்த் தூத்துக்குடி மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற மருத்துவமனைக்கு சென்றிந்தார் ரஜினி சென்றதால் மருத்துவமனையில் ஏராளமானோர் குவிந்தனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு கருதி ஏராளமான பொலிஸார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர்.
அனுமதிக்கப்பட்டுள்ள 48 பேரை அவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதற்கிடையில், மருத்துவமனைக்கு உள்ளே செல்ல ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பொலிஸாருக்கும், ரசிகர்களுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கவிடயம் .