அயனாவரத்தில் 12 வயதான மாற்றுத்திறனாளி சிறுமி, அடுக்குமாடி குடியிருப்பின் ஊழியர்கள், காவலர்கள் என பலரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
சென்னை அயனாவரத்தில் 12 வயதான மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைதான 17 பேரையும் நீதிமன்ற வளாகத்தில் வைத்து சட்டத்தரணிகள் தாக்கியுள்ளனர்.
கடந்த 7 மாத காலமாக நீடித்த இந்த கொடுமை அண்மையில் தெரியவந்ததும் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அவர்கள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், அயனாவரம் பொலிஸார் 24 பேரை விசாரணை செய்து, 17 பேரை கைது செய்தனர்.
அவர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
குற்றம்சாட்டப்பட்ட 17 பேரையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிமன்ற வளாகத்தில் இருந்து அவர்கள் 17 பேரையும் பொலிஸார் அழைத்துச் செல்லும் போது, ஆத்திரமடைந்த சட்டத்தரணிகள் பலர் சேர்ந்து அவர்களைத் தாக்கியுள்ளனர்.
இதனால், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
