March 26, 2023 9:58 am

அந்நிய நாடுகளில் நிகழும் அரசியல் குழப்பங்கள் இந்தியாவில் தாக்கம் செலுத்தாது!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

அந்நிய நாடுகளில் நிகழும் அரசியல் குழப்பங்கள் இந்தியாவில் தாக்கம் செலுத்த பாதுகாப்பு படைகள் அனுமதிக்காது என மக்களவை தலைவர் ஓம்.பிர்லா தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், அங்கு இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் மேற்படி கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி விவகாரத்தைப் பொருத்தவரை ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் அமைப்பு வலுப்படுவதையே இந்தியா ஆதரிக்கும்.

ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட எந்த ஒரு அந்நிய நாட்டில் நிகழும் அரசியல் குழப்பங்களும் இந்தியாவில் பாதுகாப்பை ஏற்படுத்த நமது பாதுகாப்பு படைகள் அனுமதிக்காது. இந்திய ஆயுதப்படைகள் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்