March 26, 2023 10:31 am

தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் நாளை!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கின்றது.

அதாவது, தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு, ஒரே நாளில் 20 இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் படி நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 18 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மூத்த குடிமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை மாவட்டம் வாரியாகத் தேர்வு செய்து, தடுப்பூசி முகாம்களை அமைக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்